நான் எனப்படும் நான் : 100
#WhoIsJay ; 076



“ஒரு பிரச்சினை வந்தால் என்ன செய்ய வேண்டும் ? அதுவும் எதிர்பாராமல் ஒரு பிரச்சினை … அப்போது என்ன செய்வது ? “
நான் என்ன செய்தேன் என்று இங்கே சொல்கிறேன்.



Covid19 Positive வந்தவுடன் … எனக்குள் என்னென்ன மாற்றங்கள் வந்தன ? அதற்கு நான் என்னவெல்லாம் செய்தேன்.
1. முதல் மாற்றம் – தூக்கம். இப்படி ஒரு தூக்கத்தை நான் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. எப்போது எழுகிறேன் எப்போது தூங்குகிறேன் என்றே தெரியாத தூக்கம். அதனால் .. என் தூக்க Pattern மாறிப்போனது. இரவு 10 மணி அளவில் தூங்கி, காலை 04 மணி அளவில் எழுவது .. என் pattern. ஆனால் Covid19 க்கு பின் .. இது ” எப்போது வேண்டுமானாலும் ” என்று மாறியது.
சரி .. நான் என்ன செய்தேன் ?



Weight ஏற்றம் மற்றும் ஒழுங்கு முறை உணவை மாற்றியமைக்க … இதை இரண்டாவதாக கையில் எடுத்தேன்.
நான் என்ன செய்தேன் ?
முதலில் ஒரு Complete Break வேண்டும் என்று 24 hours Fasting எடுக்க .. ( ஆம். Fasting உடலை அதுவாகவே சரி செய்ய உதவும் ) .. உடல் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எடை மீண்டும் குறைய ஆரம்பிக்க .. இப்போது என் வழக்கமான Diet உணவு முறைக்கு திரும்பியாயாற்று. முடிவு சுபம்



பிரச்சினைகள் வரும்போது தான் நாம் படித்தவை, உணர்ந்தவை, கற்றவை எல்லாம் நம் உதவிக்கு வரவேண்டும். இந்த முறை Diet, Fasting, Slow Jogging, Goal Setting .. அனைத்தும் என்னை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தன.
நன்றாக இருக்கும்போது உதவுவதை விட பிரச்சினைகளின் போது உதவினால் தான் கற்றலுக்கு மரியாதை ! இல்லை எனில் அது வெறும் பொழுதுபோக்கு தான் !



எதிர்பார்த்த எதிர்பாரா பிரச்சினைகள் வரும்போது .. உங்களின் அடுத்த Best ஐ நீங்கள் கொண்டு வர வேண்டி இருக்கும். அதற்கு தயாராகவாவது .. பிரச்சினைகளை சிரித்து வரவேற்கலாம்.
உங்களின் அடுத்த Best வெளிவர எம் முன்
வாழ்த்துக்கள்
!


