Jerspective : 031



Leh. அதிகாலை. பெரும் குளிர். ( வெய்யில் எல்லாம் சும்மா ஒப்புக்கு தான். குளிர் தான் அங்கே நிஜ ஆளுமை !). வழக்கம்போல என்னுடைய Walking ஐ தொடங்கியாயிற்று. காட்சிகள் நிறைய என் கண்களை கவர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தக் காட்சி அசத்தியது !
பெண்களை காலையில் … அதுவும் அதிகாலை வேளைகளில் Walking / Jogging என்று பார்ப்பது இப்போதும் அதிசயம் தான். நான் இப்போது வசிக்கும் இடத்தில் கூட அதிகபட்சம் 50 பெண்களை பார்க்க முடியும். அவ்வளவே. அவர்களுக்கும் உடல் நலம் முக்கியம். அவர்களுக்கும் ஒரு Let out இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் .. அவர்களின் commitments அவர்களை ஆண்களை போல நினைத்தபடி வரவிடாது செய்து விடுகிறது. உலகம் எழுந்த பின் அவர்கள் நடக்க முடியாது – மற்றவர்களுக்காக நடக்க ஆரம்பிப்பதால்.!அத்துடன் பாதுகாப்பு பயங்களும்.
இவ்வளவிற்கு இடையிலும் .. Leh என்கிற .. சுற்றுலா தளத்தில் காலையில் அந்தப் பெண்மணி நடந்தது எனக்கு ஆச்சர்யம்.
மொத்த சாலையும் அமைதியாய் இருக்கும் அதிகாலையில் ஒரு பெண் மட்டும் நடந்து செல்லும் காட்சி மிக அரிது ! அப்படி ஒரு காட்சியை கண்டதும் எனக்குள் இருக்கும் புகைப்பட ஆர்வலன் செயல்பட ஆரம்பித்தான்.
சில காட்சிகள் சில நொடிகள் மட்டுமே இருக்கும். பின் மறைந்து விடும். அதற்குள் எடுக்க வேண்டும். அதிலும் .. Leh புதிய இடம். எதிரே இருப்பது பெண். நான் ஆண். அவருக்கு தெரியாது எடுத்தால் பிரச்சினையாகும் வாய்ப்புண்டு. ஆனால் .. சொல்லி அனுமதி வாங்கி பின் எடுத்தால் இந்த அழகு வராது. இப்படியெல்லாம் யோசித்தாலும் …சட்டென புகைப்படம் எடுத்தாயிற்று.
பின் அவரிடமே காண்பித்து தான் எடுத்த காரணத்தை சொன்னேன். முதலில் அவரின் புகைப்படம் அவருக்கு அதிர்ச்சி. ( பொதுவாக பெண்களுக்கு தாங்கள் தங்களை அறியாமல் புகைப்படம் எடுக்கப்படுகிறோம் என்பதில் விருப்பமில்லை. ). ஆனாலும் .. என்னவோ தெரியவில்லை. இந்த புகைப்படம் அவருக்கு பிடித்திருந்தது. என்னை அறிமுகப்படுத்திவிட்டு .. நான் எடுத்ததன் காரணத்தை சொன்னபோது .. வான் நோக்கி பார்த்துவிட்டு சிரித்து ” Beautiful Mr Jay ” என்று மீண்டும் பார்த்துவிட்டு மீண்டும் ” Beautiful ” என்றார்.
புகைப்படங்கள் என்பவை போகிற போக்கில் எடுத்துவிட்டு பகிர்ந்து செல்லப்பட அல்ல. அவற்றிற்கு பின் ஒரு அழகான கதை / சுவாரஸ்யம் / யதார்த்தம் / அதிர்ச்சி / தாக்கம் / வித்தியாசம் / தனித்தன்மை .. அனைத்தும் இருக்கும். அது பகிரப்படவில்லை எனில் .. புகைப்படங்கள் வெறும் Glamour Quotients தான்.
புகைப்படங்களை நீங்கள் பகிரும்போது அவற்றின் பின்னணியை எழுதி பகிருங்கள். அங்கே தான் இருக்கிறது ஒரு புகைப்படத்தின் இதயம் !
மீண்டும் சொல்கிறேன்.
” அதிகாலையில் ஆண்களுக்கு முன் Walking / Jogging என்று வரும் பெண்களை பார்ப்பது மிக அரிது “


