Jerspective : 033



ஆங்காங்கே ஏரிகள் நமக்க்காக காத்துகொண்டே இருக்கின்றன. அமைதியாய். எதிர்பார்ப்புடன். எதற்காக ?



ஓடிக்கொண்டே இருக்கும் மனித மனம் நிற்பதை விரும்புவதில்லை. தூங்கும்போது மட்டும் மனிதன் தன் மனதை கொஞ்சம் நிறுத்தி கொள்கிறான். ஆனால் பலர் .. அப்போதும் கூட . .. ஏதோ நினைவுகளில் மனதை ஓட விட்டு கொண்டே இருக்கிறார்கள். தேடுதலை Illusion ல் வைத்திருக்கும் மனிதனுக்கு .. அமைதி என்பதே இல்லை.
ஆனால் ஏரிகள் அப்படி இல்லை. அமைதியை Relaity யில் வைத்துக்கொண்டு நமக்காக காத்திருக்கின்றன. மனிதன் இருக்கும் அத்தனை பகுதிகளிலும் ஒரு ஏரி அவனுக்காக அவளுக்காக காத்துக்கொண்டே இருக்கிறது. ஏரிகளுக்கு மட்டும் கால் இருந்து நாம் பார்க்க வரவில்லை என்பதால் கோபித்துக்கொண்டு எழுந்து நடந்து செல்ல ஆரம்பித்து விட்டால் ? நினைக்கவே முடியவில்லை தானே ! ஆம். நாம் வாழ தேவையான ஏரிகளை நாம் பார்க்காமல் இருந்தாலும், அவை நமக்காக காத்துகொண்டு தான் இருக்கின்றன. நன்றி மறத்தலை மன்னிப்பதை இதை விட பலமாய் செய்ய முடியாது !
ஏரிகளை நாம் மண் போட்டு மறைக்கிறோம். அதற்கு மேல் வீடு கட்டுகிறோம். கழிவுகளை ஏரிகளில் கலக்கிறோம். அதன் இயல்பை எப்படி எல்லாம் கெடுக்க முடியுமோ அப்படி கெடுக்கிறோம் ! ஆனாலும் அவை அமைதியாகவே நம்மை பார்த்து சிரிக்கின்றன. பின்னே ? கிளையில் அமர்ந்து கிளையை வெட்டும் மனிதனை பார்த்து அவை சிரிக்காமல் என்ன செய்யும் ?
இந்த இமயமலை ஏரிக்கு அந்த கவலை எல்லாம் இல்லை. இங்கே மனிதன் இல்லை என்பதால் அவை ஒரு ஏரி எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கின்றன. அவற்றிற்கு அருகில் அமர்ந்தால் நம் முகத்தை பிரதிபலிக்கும் வேலையை செய்துவிட்டு .. ” உன்னை நீயே பார்த்துக்கொள் ” என்று சிரிக்கின்றன. நம்மை நாம் ஏரியில் பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கின்றோம்.
நகரங்களின் ஏரியில் நம் முகத்தை பார்த்துவிட முடிகிறதா ? அப்படி முடிந்தாலும் நாம் சென்று பார்க்கிறோமா ? யோசிப்போம்.


