Jerspective : 034
” A Living Set Up In A Lonely Place – Is A Boon “
பெரும் வெளி. கண்ணுக்கெட்டிய வரை மனிதர்கள் அற்ற பகுதி. நீல வானம். வெண் மேக அணிவகுப்பு. இரவுகளில் வானம் முழுக்க நட்சத்திரம். பனி மலை. ஒற்றை இலக்க குளிர் கால நிலை. காற்றில் அமைதி. பச்சை புல்வெளி. சில Yak எருதுகள். சில ஆடுகள். சில கிலோமீட்டர் தொலைவில் ஏதோ ஒரு கிராமம். அதில் வாழவேண்டிய வாழ்க்கைக்கு தேவையான பொருள்களை வாங்கும் வசதி. பண்ட மாற்று முறையில் ஆடுகள் வாழ்க்கை வாழ தேவையான பொருளாதார சூழ்நிலையை கொடுத்து கொண்டே இருக்கின்றன.
Network இல்லை. Cellphone இல்லை. TV இல்லை. அக்கம்பக்க அனாவசிய பேச்சுகள் இல்லை. வாகன படையெடுப்பு இல்லை. புகை இல்லை. சத்தம் இல்லை. Corporate உலகம் இல்லை. முன்னேற வேண்டிய கட்டாயத்தில் … யாரை பின் தள்ளலாம் என்னும் எண்ணம் இல்லை. வியாபார போட்டி இல்லை. Alcohol இல்லை. Cigarette இல்லை. Newspaper இல்லை. வந்து குவியும் செய்திகள் இல்லை. அரசியல் இல்லை. குறிப்பாக அரசியல்வாதிகளின் கண் திறந்த பொய்கள் இல்லை. தேவைக்கு அதிகமான அனைத்தும் இல்லாத உலகில் Minimalism முழுமையாக இருக்கிறது.
சுத்தமான காற்றும் நீரும் இயற்கையான சில இலைகளும் தான் இங்கே மருத்துவம். எதற்கும் நடக்க வேண்டும் என்பதே உடற்பயிற்சி. இயற்கை தன்னை Switch off செய்து, Switch on செய்யும் போது … தூங்குவதும் எழுதுவதும் இங்கே தியானம். அமைதியான சூழல் தான் எண்ணங்களின் சுத்திகரிப்பாளர். இங்கே ஒரு குடில். தனியாக / குடும்பமாக .. என்பது பெரும் வரம்.
குழந்தைகள் ? இயற்கையை படிக்கிறார்கள். மலைகளில் வாழ்கிறார்கள். எதிர்பாராமல் நடக்கும் சூழ்நிலைகளை சந்தித்து வாழ்க்கையை படிக்கிறார்கள். காலையில் இருந்து மாலை வரை சிரித்து மகிழ்கிறார்கள். யாரும் இங்கே வராதவரை அவர்களின் உலகில் Comparison இருப்பதில்லை !
இப்படியான இடங்களை பார்க்கும்போது நாம் மிகவும் அலட்டிக்கொள்கிறோமோ …வாழ்வதற்கு என்று எனக்கு தோன்றுகிறது.
உங்களுக்கு ?





