Jerspective : 035
” Unlimited Nature Inspires Limited Minds to Change its Settings “



இயற்கைக்கு எல்லை உண்டா ? இப்படி ஒரு கேள்வி உங்களுக்குள் எழுந்தது உண்டா ? கொஞ்சம் கவனித்தால் சில விஷயங்கள் புரியும்.
வான் என்று எதுவும் இல்லை. எல்லையற்ற ஒன்றைத் தான் வான் என்கிறோம்.
காற்றுக்கு எல்லை இல்லை.
நெருப்புக்கு எல்லை இல்லை. நீருக்கு, நிலத்திற்கு எதற்கும் எல்லையே இல்லை. ஆங்காங்கே நாம் வசிக்க ஏற்படுத்தும் இருப்பை அதன் எல்லை என்று நாம் நினைத்தால் அது நம் அறியாமை !



ஆனால் மனிதன் தன்னை ஒரு எல்லைக்குள் வைத்துக்கொண்டே இருக்கிறான். அப்படித்தான் அவன் உபயோகப்படுத்தும் அனைத்தும் இருக்கிறது. வீடு, Car, அவன் வாங்கும் நிலம், அவனின் பணம், அவனின் உடை .. எல்லாவற்றிலும் ஒரு எல்லையை வைத்துக்கொள்கிறான். அதற்குள் வளர்ந்து அதற்குள் வாழ்ந்து அதற்குள் மடிகிறான்.
ஆனால் … அவனின் மனம் எல்லை அற்றது. அது இந்த எல்லைகளை பார்த்து கண்ணீர் வடிக்கிறது. கேள்வி கேட்கிறது. அதுதான் .. அவனுக்கு Stress உருவாக காரணம். நமக்கு கோபம், எரிச்சல், ஏமாற்றம் வரும்போது எல்லாம் என்ன செய்கிறோம் என்று நீங்கள் கவனித்தது உண்டா ? ஆம். வெளியே சென்று நடக்கிறோம். உண்மையாய் நாம் நடக்க ” வெளியே ” செல்லவில்லை. ” முடிவிலி ” – Unlimited உடன் தொடர்பு கொள்ளவே வெளியே செல்கிறோம். இயற்கை என்னும் முடிவிலி நம் கோபம் ஏமாற்றம் எரிச்சல் …அனைத்தையும் … Negligible ஆக்கிவிட்டு .. நமக்கு நம்மை மீண்டும் கொடுக்கிறது. அதுதான் Unlimited இயற்கையின் பலம்.



மரம் ஒன்றை கவனியுங்கள். அதற்கு எல்லையே இல்லா வளர்ச்சி உறுதியாய் இருக்கிறது. அது உயிரோடு இருக்கும் வரை வளர்ந்து கொண்டே இருக்கிறது. நீளத்தில் அல்லது அகலத்தில் அல்லது .. பழங்களாக …அல்லது … தன்னை புதுப்பித்து கொள்ளலில் …. அது வளர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் நாம் ?
யோசிப்போம்.
( இன்று காலை Yercaud Slow Jogging ன் போது மனதை என்னவோ செய்த இயற்கை காட்சி இங்கே புகைப்படமாய் ! )