Jerspective : 036
” Only Few Can Listen to The Silence Flowers Speak “
வாழ்க்கையின் ஓட்டத்தில் அவை மௌனமாய் பேசுவதை யாரும் கேட்பதில்லை. இன்னமும் குறிப்பாக சொல்ல வேண்டும் எனில் … கேட்க யாருக்கும் நேரமில்லை !
அப்படி என்னதான் பேசிவிடும் பூக்கள் ?
இப்படியெல்லாம் பூக்கள் வாழ்வதால் தான் நாம் பூக்களை தேர்ந்து எடுக்கிறோம். சில பூக்களின் கம்பீரம் எனக்கு மிக பிடிக்கும். குறிப்பாக செம்பருத்தி. சில பூக்களின் அழகு – குறிப்பாக ரோஜா. சில பூக்களின் வடிவம் – பவழ மல்லி. பூக்கள் நம் வாழ்வில் நம்முடன் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. நம்முடன் பயணிக்கும் மனிதர்களுக்கும் பூக்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் !
ஆம். அவை அன்றன்று வாழ்ந்து அன்றன்று .. மறைபவை.
நாம் ? மறைவே இல்லை என்ற எண்ணத்தில் .. என்னென்னவோவெல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம்.
யோசிப்போம்.





