நான் எனப்படும் நான் : 101
பெரிதினும் பெரிது செய் !



200 fb Lives. என் முகத்தை பார்த்துக்கொண்டே நான் பேசிக்கொண்டே இருந்த 200 Lives இது. இதில் .. நான் சந்தித்த அனுபவங்கள் பல. கற்ற அனுபவங்கள் பல. Virtual ஆக சந்தித்த மனிதர்கள் பலர். இன்னமும் நான் சந்திக்காதவர்கள் பலர். இந்த பயணம் இன்னும் தொடர்கிறது.
இந்த பயணத்தில் என்னுடன் பயணித்த, வாழ்க்கையில் / திறமையில் / எதிர்பாரா சூழ்நிலைகளில் வெற்றி பெற்ற பெரும் ஆளுமைகள் .. ராமானுஜன், டென்சிங், கிரஹாம் பெல், பில் கேட்ஸ், NS கிருஷ்ணன் … என்று நிறைய மனிதர்களை சொல்லிக்கொண்டே போகலாம். அவர்கள் இந்த live ஐ கேட்ட மனிதர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். வடிவேலு அவர்களும் ரஹ்மான் அவர்களும் …சம கால ஆளுமைகளாக … நம்மிடம் ஏற்படுத்திய மாற்றங்கள் இன்னமும் அசாத்தியமானவை.
நம் திறமைகளை வெளியே கொண்டு வருகிற தலைப்புகளால் .. நம்மிடமே மாற்றங்களை கொண்டு வந்து .. நம் முன்னே வாழுகிற ஆளுமைகளையும் நாம் கவனிக்கிறோம். அது மட்டுமில்லை …அவர்கள் தங்களிடம் எப்படி மாற்றங்களை கொண்டு வந்தார்கள் என்று சொல்லவும் செய்கிறார்கள்.
பெண்களுக்கு என்று வந்த தலைப்புகள் …நிறைய சிந்தனைகளை ஏற்படுத்தி இருப்பதை இங்கேயே கவனிக்க முடிகிறது. வியாபாரம் சார்ந்து பேசியவை அதற்கான மாற்றங்களை கொண்டு வருவதை காணமுடிகிறது. வயதானவர்கள் பற்றிய தலைப்புகள் … அவர்களை உந்தி தள்ள, சிறு குழந்தைகளை பற்றிய தலைப்புகள் பெற்றோர்களை யோசிக்க வைத்திருக்கிறது. இது ஒரு பெரும் பயணம். விதைத்து கொண்டே செல்ல வேண்டிய இந்த பயணத்தில் … நாளை வெளிவரும் பெரும் மரங்களை பற்றி எனக்கு கவலை இல்லை. இன்று விதைப்பதை பற்றி மட்டுமே யோசிக்கிறேன்.
பெரிதினும் பெரிது கேள் – என்ற வாசகம் பதிந்து இருக்கும் இந்த T Shirt அணியும் போது எல்லாம் எனக்குள் இன்னொரு வாசகம் தோன்றும். அது …
பெரிதினும் பெரிது செய் !
பெரிது செய்கிறேனா … என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பெரும் பயணம் என்று மட்டும் எனக்கு தெரிகிறது. என்னுடன் பயணிப்பவர்கள் அனைவர்க்கும் முன்
வாழ்த்துக்கள்
. உங்களின் வாழ்க்கை சிறப்பாக வர தேவையான அனைத்து சிந்தனைகளும் உங்களை அடையட்டும்.
நாளை விதைக்க வேண்டியவைகளை இன்று யோசித்துக்கொண்டே இதை எழுதுகிறேன். நிறைவாக இருக்கிறேன். நீங்களும் நிறைவாகவே இருக்கலாம். ஏன் எனில் .. நிறைவாக இருப்பது மட்டுமே நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
பயணிப்போம். குறிப்பாக கடின காலகட்டத்தில் – ஒன்றாக !


