Jerspective : 038
” When Mist Takes Over, Get The Support of Inner Light “



வாழ்க்கையில் சட்டென மனிதர்களின் நடவடிக்கைகள் Mist ஆக மாறிவிடும் !
” நன்றாக தானே பேசிக்கொண்டு இருந்தார் …என்ன ஆச்சு இவருக்கு / இவளுக்கு ? “
என்று எனக்கு தோன்றும்போதெல்லாம் … எனக்குள் இருக்கும் ” அக வெளிச்சம் ” உதவிக்கு வந்துவிடும். அது சொல்லும் பாடங்கள் சுவாரஸ்யமானவை.
அவற்றில் சில இங்கு …













ஒரு யோகி தன் சீடர்களை பார்த்து கேட்டார் …
” தூங்கி எழுந்தாயிற்றா ? “
எல்லோரும் கேள்வி முடிவதற்குள் ” ஆம் ” என்று சொன்னார்கள்.
ஒரே ஒருவன் மட்டும் … சில நொடிகள் கழித்து ..
” மன்னியுங்கள் குருவே. இப்போது தான் அகத்தில் விழிக்கிறேன். சில நொடிகளுக்கு முன் வரை உடல் மட்டும் தான் விழித்திருந்தது “
என்று சொல்லி காலில் விழுந்தான்.
என்ன ? உங்களின் ” அக வெளிச்சம் ” விழித்திருக்கிறதா ?