Jerspective : 040
” Purpose Brings Beauty – To Everything in this World “



அந்த குழந்தைக்கு தொட்டில் கட்ட நினைக்கும்போது எல்லாம் அது கண்ணுக்குள் படும். மற்ற நேரத்தில் அதை நாம் கண்களால் பார்க்க கூட செய்வது இல்லை. மனித வாழ்வில் .. குழந்தைகளின் வரவிற்காக வீட்டில் காத்துக்கொண்டு இருப்பது மனிதர்கள் மட்டும் என்று நீங்கள் நினைத்தால் தவறு. அதுவும் காத்துக்கொண்டே இருக்கிறது. குழந்தையை மேலே இருந்து கவனமாக பார்த்துக்கொண்டே இருக்கும் அதற்கும் ஒரு தாய் மனம் இருக்க வேண்டும்.
வெறும் சுவர். ஆனால் அது வந்தவுடன் வண்ணமய அலங்காரமாக மாறிப்போகிறது. எப்போதுமே தொங்கும் வண்ணம் நம்மை இழுக்கவே செய்கிறது. அதுவும் வட்டமாய் வளைவாய் ! மகிழ்வான பழைய நினைவுகளை அது புதுப்பிக்கிறது.
வாழ்க்கை அந்த வெற்று சுவர் போலத்தான். ஒரு வண்ணம் உள்ளே வந்தால் .. அனைத்தும் மாறிபோகும்.
வியர்க்கும்போதெல்லாம் நம்மை வந்தடையும் செயற்கை காற்றை கொடுத்துவிட்டு மௌனமாய் நிற்கிறது அது. அல்லது சுழல்கிறது. வெளிக்காற்று வரா இடங்களில் அது உதவிக்கு வந்துவிடுகிறது. என் தாத்தா வீட்டில் அது இருந்தாலும் அவர் கைவிசிறியைத் தான் உபயோகிப்பார். அவருக்கு இயற்கையாக வெளியே அமர்ந்து கைவிசிறியில் காற்றை பிடிக்க ஆசை. நமக்கு வேறு வழியில்லை என்பதால் அறைக்குள் அமர்ந்து அது கொடுக்கும் காற்றை உடலை ஆசுவாசப்படுத்த உபயோகிக்கிறோம். அது இல்லாத வீடுகளை யோசிக்க முடியவில்லை. அது இல்லா காற்றோட்டமான வீடுகள் இருப்பின் அங்கே வந்து தங்க ஆசையாக இருக்கிறது.
புகைப்பட கண் அப்படித்தான் பார்க்கும். சுவற்றில் ஏதோ இருக்கிறது என்று பார்க்காது. அதை அது சொல்லாமல் சொல்லும் உணர்வை .. கவனிக்கும்.
உங்களின் புகைப்பட கண்ணுக்கு என் முன்
வாழ்த்துக்கள்
. இந்நேரம் அது பார்க்கும் எதிலும் அது ஒரு உணர்வை கவனிக்க ஆரம்பித்திருக்க கூடும்.
அதெல்லாம் சரி … உங்களின் புகைப்பட கண்ணுடன் நீங்கள் உண்மையிலேயே வாழ்கிறீர்களா ?


