Jerspective : 041
” Road is A Muted Friend Travels with us .. Forever ! “
நம்முடன் பயணிக்கும் சாலைகள் பேசுவதில்லை. ஆனால் உடன் பயணிக்கின்றன. பேசுவதில்லை. ஆனாலும் புரிந்துகொள்கின்றன. பேசுவதில்லை .. ஆனாலும் நம்மை சேர வேண்டிய இடம் நோக்கி கொண்டு சேர்க்கின்றன. எப்போதும் ! என்ன ஒரு அழகான முரண் ! இப்படியான நட்புக்களை நாம் பெற்று இருக்கிறோமா ?
நட்புக்களில் பல விதம் ..
நமக்கு இருக்கும் நட்புக்களை அப்புறம் கவனிப்போம். முதலில் நாம் எப்படி இருக்கிறோம் ?
நேற்றைய பேச்சில் ..
Anbu Arulmozhi
Cynthia Alexander
Vidhya Subramaniyan
.. மூவரும் பேசுவதில்லை ஆனாலும் உடனே Connect ஆவோம் என்றார்கள். எவ்வளவு பெரிய வார்த்தை அது ! கவனிக்க வேண்டிய பாடம். கவனிக்கிறோமா ?
இரு யோகிகள் நடந்து கொண்டிருந்தனர். ஒரு யோகி இன்னொரு யோகியை பார்த்து சிரித்ததும் அந்த இன்னொரு யோகி கேட்டார் ..
” எப்படி கண்டுபிடித்தாய் ? “
அங்கே கதை முடிந்து விடுகிறது. நட்பின் / புரிதலின் இலக்கணமாக இந்த கதையை தான் சொல்வேன். பெரும் பேச்சை பேசும் சிறு Zen கதை இது !
என்ன ? உள்ளே என்னவோ செய்கிறதா ? அதிகம் பேசிக்கொண்டே இருக்கிறோமோ ?
யோசிப்போம் !





