Jerspective : 043
” Where are These Skills /Those who Possessed these Skills / Those Generations ? “
இந்த சிலையை பார்த்தவுடன் உங்களுக்கு கும்பிட தோன்றுகிறது என்றால் .. நீங்கள் திறமையை இன்னமும் கவனிக்கவில்லை என்று அர்த்தம்.
இந்த சிலையை பார்த்தவுடன் உங்களுக்கு பூஜை செய்ய தோன்றுகிறது என்றால் …நீங்கள் திறமையை இன்னமும் கவனிக்கவில்லை என்று அர்த்தம்.
இந்த சிலையை பார்த்தவுடன் யாரோ இதை செய்துவிட்டு மறைந்திருப்பார்கள் .. என்று நீங்கள் நினைத்தால் இன்னமும் திறமையை கவனிக்கவில்லை என்று அர்த்தம் !
ஒரு உருவம் சிலையாக மாறுவது என்ன சாதாரண விடயமா ? அந்த கால மனிதர்களின் எண்ணங்களுக்கு இந்த சிலையில் இருக்கும் ஒவ்வொன்றும் Representations.
இதெல்லாம் இருக்கட்டும் .. இந்த சிலைகள் செய்த திறமைகளை நாம் எப்படி இழந்தோம் ? திறமைக்கான பயிற்சிக்கூடங்கள் இருந்திருக்க வேண்டுமே அவை எங்கே ? இந்த திறமைகளின் வாரிசுகளில் சிலர் இந்த திறமையுடன் இருந்திருப்பார்களே அவர்கள் எங்கே ? எந்த அரசாங்கம் இவர்களை கவனிக்க மறந்தது ? எந்த அரசாங்கம் இந்த திறமைகளை இழந்தது ? திறமைகளை இழந்துவிட்டு அரசாங்கம் வேறு என்ன உருவாக்கப் போகிறது ?
எத்தனை கேள்விகளை ஒரு சிலை உருவாக்குகிறது. அந்த சிலையிடமே நான் கேட்டேன். ” உன்னை உருவாக்கிய திறமைகள் எங்கே ? “. மௌனமாகவே சிலை இருந்தது. நம்மை போலவே. நமக்கு தெரியாததை போல அதற்கும் தெரியவில்லை. எனக்கு இந்த தெய்வங்கள் மேல் ஒரு வருத்தம் உண்டு. தன்னை வடிவமைத்த திறமைகளை இந்த தெய்வங்கள் காப்பாற்றி கொண்டு வந்திருக்க வேண்டும். எதை இழந்தாலும் திறமை இருந்தால் தெய்வம் நம்மை நம் தலைமுறையை காப்பாற்றும் என்ற நம்பிக்கை வர வைத்திருக்க வேண்டும்.
” திக்கற்றவற்கு தெய்வமே துணை ” என்பது .. ” திக்கற்றவற்கு திறமையே துணை ” என்று மாற்றி எழுதப்பட வேண்டும்.
Yaazh Mozhi க்கு இன்று பிறந்த நாள். அவருக்கு இந்த புகைப்படத்தை / இந்த புகைப்படம் சொல்லும் செய்தியாய் நான் எழுதி இருப்பதை Gift ஆக கொடுக்கிறேன்.
உங்களிடமும் யாழிடமும் ஒரே ஒரு வேண்டுகோள்
திறமையை காணின் அதை அடுத்த உயரத்திற்கு எடுத்து செல்வீரா ? அடுத்த தலைமுறை வரை ?
யோசிப்போம். முன்
வாழ்த்துக்கள்
.





