நான் எனப்படும் நான் : 104
” சிரித்து கட ”
![]()
![]()
![]()
வாழ்க்கை அப்படித்தான். ஏதாவது ஒரு எதிர்பாராததை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதே வாழ்க்கை DNA விலேயே சர்வ கஷ்ட நிவாரணி சிரிப்பையும் இணைத்தே அனுப்பி விடுகிறது. ஆம். Customised Design.
முதலில் நாம் சிரித்து கடக்கவேண்டியது மனிதர்களை ! வருடக்கணக்கில் எல்லாம் மனிதர்கள் உடன் பயணிக்க மாட்டார்கள். அவரவர்க்கு ஒரு Destination. அது வந்தவுடன் bye சொல்லி செல்வது தான் யதார்த்தம். இது புரிந்துவிட்டால் மனிதர்களை சிரித்து கடப்பது எளிது. ” நான் உன்னை எப்படி எல்லாம் நினைச்சேன் ” என்பது சிரிப்பின் எதிரி. மனிதன் மாறுவது யதார்த்தம். அவனை அவளை சொல்லி குற்றமில்லை. நம்மை சரி செய்வதே யதார்த்த தீர்வு. அதே போல இறப்பும் ஒரு Destination. அது வந்ததும் அங்கே பிரிபவர்கள் பிரிந்து விடுவார்கள். இதை உணர்ந்தாலும் சிரிப்பு நிச்சயம்.
இரண்டாவதாக நாம் கடக்க வேண்டியது சூழ்நிலைகளை ! தாயத்தை உருட்டுவது போலத்தான் ஒவ்வொரு நாளும். எது எப்படி விழும் எழும் என்று தெரிய வாய்ப்பில்லை. விழுவதை எழுவதை அப்படியே ஒத்துக்கொண்டு அங்கே இருந்து ஆட்டத்தை துவங்கினால் சிரிப்பு நிச்சயம்.
மூன்றாவதாக கடக்க வேண்டியது பொருளாதார வாழ்வின் கணக்குகளை ! என்னவெல்லாமோ கணக்கு போட்டு நிமிர்ந்தால் .. Covid 19 உங்களுக்கு நமக்கு காட்டி இருக்கும் கணக்கு நாம் அனைவரும் எதிர்பாரா ஒன்று. அங்கே தான் இருக்கிறது சூட்சுமம். இந்த சூழ்நிலையை அழுது கடக்க போகிறோமா அல்லது சிரித்து கடக்கிறோமா என்பது நம் Choice. அதாவது choice ல் விட்டுட்டேன் ன்னு சொல்ல முடியாத Choice. ஏதோ ஒன்றை எடுக்க வேண்டும். நான் ஒவ்வொரு முறையும் சிரிப்பை Choice ஆக எடுக்கிறேன். அப்ப நீங்க ?
சரி. சிரித்து கொண்டே இருந்தால் எப்போது தான் Serious ஆக இருப்பது ! ஹலோ மனிதர்களே .. ஒருவன் ஒருத்தி சிரித்துக்கொண்டு இருந்தால் அவன் அவள் serious ஆக இல்லை என்று நினைப்பது எவ்வளவு பெரிய மூடத்தனம் ! சிரிப்பு என்பதே Life ஐ Serious ஆக எடுப்பதால் தான் வருக்கிறது. Life ஐ மேம்போக்காக எடுப்பவர்களால் தான் சிரிக்க முடியாது போகும்.
என்ன குழப்பமாக இருக்கிறதா ? மீண்டும் சொல்கிறேன். சிரிப்பு என்பதே Life ஐ Serious ஆக எடுப்பதால் வருவது. Life ஐ மேம்போக்காக எடுப்பவர்களால் சிரிக்க முடியாது.
இப்போது உங்கள் இதழில் புன்னகை வருகிறது எனில் .. நாம் இருவரும் ஒன்றாக பயணிக்கிறோம் என்பது ஞாபகத்தில் இருக்கட்டும் !





