நான் எனப்படும் நான் : 107
கருமை க்கு பின் எனக்கு பிடித்த ஒரு வண்ணம் என்றால் அது வெண்மை. அதனால் தானோ என்னவோ கருமை வெண்மை வகை புகைப்படங்கள் மிகப் பிடிக்கிறது. ஏன் இந்த வண்ணங்கள் பிடிக்கிறது ?
கருமை எனக்கு மிக நெருக்கமான வண்ணம். கருமை நிற உடை அணியும்போது முகம் தவிர மீதம் அனைத்தும் கருமையாக தெரியும் அந்த கண்ணாடி காட்சி தான் எனக்கு மிக பிடித்த காட்சி. முகம் கருப்பாஸ்மி போல .. முகம் மட்டும் யதார்த்தம். மீதம் அனைத்தும் கருமை. கருமை தான் யதார்த்தம். ஆழ் மனம் முதல்.. ஆழ்கடல் வரை அனைத்தும் கருமை தான். ஒரு நாளின் சரி பாதி நேரமும் கருமை தான் ! இந்த கருமை எதை Represent செய்கிறது ?





வெண்மை வேறு Expression. சட்டென ஒரு பளீர் சிரிப்பும் ஆற்றலும் சேரும் களமாக அது எனக்கு இருக்கும். வெண்மை ஆடை நாட்கள் அனைத்தும் மகிழ் நாட்களே !
கருமை இல்லை என்றவுடன் அடுத்த Choice இயற்கையாகவே வெண்மை என்பதாலும் இந்த வண்ணம் எனக்கு பிடித்ததாக மாறி இருக்கக்கூடும். வெண்மை நிற சட்டை, வெண்மை நிற வேட்டி, என்று நடக்கும்போது மனதிற்குள் என்னவோ energy வருவது உண்மையே !



உங்களுக்கு பிடித்த வண்ணம் என்ன ? அதன் சார் ஆடை அணிந்த புகைப்படம், அதன் சார் எண்ணங்களை… பதியுங்களேன். மகிழ்வோம்.