நான் எனப்படும் நான் : 108



2021 ஒரு Game Changer ஆக இருக்கப்போவது நிச்சயம். எனக்கு மட்டும் அல்ல. தன்னை உணர்தலை சரியாக செய்திருக்கும் அனைவர்க்கும் !



எனக்கு என்று ஒரு உள்ளுணர்வு உண்டு. ( இது ஒன்றும் special இல்லை. அனைவர்க்கும் இது உண்டு. எனினும் உணர்ந்தவர்களுக்கு இது பெரும் பலம் ! ). அந்த உள்ளுணர்வில் சொல்லப்படும் விடயங்களை … கொஞ்சம் ஒழுங்காக கேட்கும் பாங்கு என்னிடம் இருப்பதால்.. இப்படி ஒன்று நடக்கப்போகிறது என்று கொஞ்சம் முன்னமேயே கணிக்க முடிகிறது !
( உங்களாலும் முடியும் ! )
அடுத்த வருடம் எனக்கான Passion ஆக இருக்கும் Training, Travel, Photography, Writing .. அனைத்துமே புதிய உயரங்களை தொடும் என்று எனக்கு மிக மிக அழுத்தமாக தோன்றுகிறது. அதோடு மட்டுமில்லாமல் New Channel of Thought ஒன்றும், சமூக பங்களிப்பில் புதிய உயரம் தொடுதலும் மிக கண்டிப்பாக நடக்க போகிறது என்றே உள்ளே ஒரு குரல் அழகாய் பேசுகிறது !
உடற்பயிற்சி யின் மூலம் உடலுக்கு வைத்திருக்கும் Outcome ஐ 2021 ல் அடைவது உறுதி. மெதுவாக ஆனால் சரியாக அதை அடைய மனம் சொல்கிறது. ஞாபகம் இருக்கட்டும் – என்னுடைய Blood Report படி உடல் இப்போதே Perfect Internal Fit ஆக இருக்கிறது !
வரட்டும் 2021. இன்னமும் என்ன வகையான Covid 19 Versions ம் வரட்டும். ஆனாலும் …
2021 ஒரு Game Changer ஆக இருக்க போவது உறுதி !
பயணிப்போம்.
( #2020ஒருபார்வை – வழக்கமாக நான் எழுதும் ஒரு வருடத்தின் மீள் பார்வை – நாளை முதல். காத்திருப்போம். நிறைய பகிர வேண்டி இருக்கிறது ! )


