யதார்த்தம்பழகு : 002
” உங்களுக்கு சட்டுன்னு கோபம் வந்தது … நான் எதிர்பார்க்கவே இல்லை “
என்று நட்பு கேட்க ..
இருவரும் சிரித்தோம்.
” எதற்கு கோபம் வந்தது ? ” நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்.
நட்பு யோசித்தது.
” செய்ய வேண்டியதை செய்யவில்லை. அதனால் தான் கோபம் வந்தது. அது புரிகிறது. ஆனால் நீங்கள் பொதுவாகவே பழக மிக இனிமையானவர். சட்டுன்னு அப்படி கோபம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை “
இருவரும் மீண்டும் சிரித்தோம்.
” பழக
இனிமையாக
இருப்பதற்க்கும் கோபம் வருவதற்கும் என்ன சம்பந்தம் ? பழக
இனிமையாக
இருப்பதால் செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருந்தால் அதையும் சகித்துக்கொண்டு பயணிப்பதா என்ன ? அதுவும் திறமை இருந்தும், புரிதல் இருந்தும், செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தால் ? “
இருவரும் அமைதியானோம்.
நான் மீண்டும் பேசினேன்.
”
இனிமையாக
இருப்பது என்பது ஒரு அழகான உணர்வு. திறமை இருந்தும் … செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பது திறமைக்கான இழுக்கு. அது சரிப்படுத்த பட வேண்டிய உணர்வு. இரண்டும் வேறு வேறு பகுதிகள். இரண்டையும் நான் குழப்பி கொள்வது இல்லை. “
” புரிகிறது. ஆனால் பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் புரியாதே ? ” என்றது நட்பு.
” ரௌத்ரம் பழகு என்றார். நிறுத்த சொல்லவில்லை. ரௌத்ரமே வேண்டாம் என்று சொல்லவில்லை. ரௌத்ரம் கெடுதல் என்று சொல்லவில்லை. Survival இருக்கும் வரை கோபம் வரும். நியாயம் சார்ந்து கோபம் வர வேண்டும். கோபமே இல்லாது ஒருவர் இருக்க முடியும் எனில் அவர் அவள் திறமையாக நடிக்கிறார் என்று அர்த்தம். அரசியல்வாதிகளின் பேட்டிகள் பார்த்தது உண்டா ? அழகாக அவர்களால் நடிக்க முடியும். நான் அரசியல்வாதி அல்ல. நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி கிடைக்கும் பெயரும் தேவை இல்லை. இதுதான் நான் என்பது புரிபவர்கள் பயணிக்கட்டும். மற்றவர்கள் நடிக்கும் அரசியல்வாதிகளை அடையட்டும். We are not Actors for General Public. We are Human Beings True to Our Conscience “
இருவரும் நடந்துகொண்டு இருந்தோம்.
பின்னால் இருந்து வந்த Motorbike ஒன்று கிட்டத்தட்ட மோதுவது போல.. மிக அருகாமையில் சென்றது.
நட்பு சட்டென கோபப்பட்டது.
” எப்படி போறான் பாருங்க “
நான் சிரித்தேன். நட்பு கொஞ்சம் யோசித்து… புரிந்து… பின்பு பலமாக சிரித்தது.
எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன்..
” Survival இருக்கும் வரை கோபம் வரும். வர வேண்டும். அது DNA வின் யதார்த்தம்.”





