யதார்த்தம்பழகு : 001
” மாமா .. இதுதான் ஆரி. இவர்தான் Bigg Boss ஜெயிச்சது “
” எப்படி அவரால ஜெயிக்க முடிஞ்சது ? “
” எல்லாத்துலயும் சரியா இருப்பார். பேசுவார். “
” அப்படி இருந்தா ஜெயிக்க முடியாதே ! எப்படி ஜெயிக்க வச்சாங்க மக்கள் ? “
இருவரும் சிரித்தோம்.
ஆரி பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் எல்லாவற்றிலும் சரியாக இருக்க முயற்சிக்கும் மனிதர்களுக்கு உலகம் வெற்றி எல்லாம் கொடுப்பது இல்லை.
பொதுவாகவே ” சரியாக இரு. அனைத்து மனிதர்களையும் / அனைத்து பக்கங்களையும் பகைத்து கொள் ” போலத்தான் உலகம் இயங்குகிறது. ஆனாலும் இங்கே ஒரு வசதி இருக்கிறது.
எல்லாவற்றிலும் சரியாக இருப்பதை – சரியாக புரிந்து கொள்ளும் சிலர் மட்டும் நம்முடன் பயணிக்கிறார்கள். உண்மையை சொன்னால் அவர்கள் மட்டும் தான் நம்முடன் பயணிப்பார்கள். அவர்களை கண்டறிய மட்டும் தான் நாம் ” சரியாக இருக்க வேண்டி “இருக்கிறது.
சரியாக இருப்பதால், குறிப்பாக அனைத்திலும் சரியாக இருப்பதால் .. வரும் இழப்புகளை பற்றி கவலைப்படாத அதே நான் தான் … அப்படி இருப்பதால் மனம் உணரும் நிறைவில் மகிழ்ந்து நிறைவாக பயணிக்கிறேன்.
பின்னே ? சரியாக இருப்பதால் மட்டுமே தேவை அற்றவைகள் நம்மை விட்டு விலகும் எனில் .. அப்படி ” சரியாக இருப்பதை ” விட சிறந்த Filter ஒன்று இருக்க முடியுமா என்ன ?
( Perfection ஐ இங்கே குழப்பி கொள்ள வேண்டாம். சரியாக இருப்பது என்பது சரியானதை / நேர்மையானதை / நெஞ்சுக்கு நீதி யாக இருப்பதை / பேசுவது, செய்வது, நடப்பது மற்றும் வாழ்வது ! )



#யதார்த்தம் தொடரும் …