Frozen Learning : 001
#FrozenLearning ; 001
💐💐💐
புகைப்படங்கள் எடுக்க நான் தயாராவதை போல ஒரு மன நிறைவான பயணம் / தருணம் வேறதுவும் எனக்கு இல்லை. நிறைய தருணங்கள் எனக்கு நெருக்கம் என்று எழுதினாலும் .. புகைப்படம் / பயணம் / அதற்கு write up எழுதுவதை போல ஒரு உயிர்ப்பான தருணம் எனக்கு கண்டிப்பாக வேறதுவும் இல்லை.
” There may be Many Cherishable Moments in Life. But .. Only One will Stand Top above of all. And .. That can’t be explained in Writing or Speech. That Can be Felt only by One – that’s You ! ”
💐💐💐
அந்த 75 ஆவது பிறந்த நாள் விழாவிற்கு நான் ஒரு புகைப்பட ஆர்வலனாக, கற்றாளனாக உள்ளே நுழையும்போது .. அப்படி ஒரு மகிழ்வு எனக்கு. உணர்வுகளை படம் பிடிப்பதை, உணர்வுகளை Represent செய்யும் சூழலை படம் பிடிப்பதை விட ஒரு சிறந்த தருணம் இருக்க முடியுமா என்ன ?. புதியதாய் அமெரிக்காவில் இருந்து வந்த Lens ஐ பரிசோதிக்க வேண்டிய ஆர்வம் வேறு ஆழமாய் ஆழ் மனதில் கொப்புளிக்க .. மனம் காட்சிகளை தேட தொடங்கியது.
“When You are in Alignment with your Inner Self – Every Visual turns out to be the Best ”
💐💐💐,
உள்ளே நுழைந்ததும் ” Power இல்லை “என்ற தகவல் வந்ததும் சிரிப்பு தான் வந்தது. ” So .. Power இல்லாத போது புகைப்படம் எடுக்க இன்று கற்க போகிறேன் “என்று மனம் துடிக்க ஆரம்பிக்க கை விரல்கள் Camera வை பற்றிக்கொள்ள தொடங்கியது. காட்சிகள் காட்சிகளாகவே தெரிவதும் Magic ஆக தெரிவதும் அவரவர் மனங்களின் தன்மை பொறுத்தது.
” When You are in Complete Involvement, Your Fingers become the Operating Codes for Magic ”
💐💐💐
” ஹலோ Photographer .. இங்க வாங்க .. இதை photo எடுங்க ”
என்று ஒரு ஆளுமை சொன்னபோது .. எனக்குள் ஒளிந்து இருந்த Trainer சிரித்துக்கொண்டிருந்தார்.
” இதோ வர்றேன் ”
வந்தவுடன் “இப்படி எடுங்க ” என்று எனக்கு Instructions கொடுக்க கொடுக்க .. கேட்டுக்கொண்டே அந்த ஆளுமை சொன்னது போல எடுத்தேன்.
” எங்கே காமிங்க ? ”
என்று கேட்டவுடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்த போது
“ஹ்ம்ம். இப்படி தான் எடுக்க சொன்னேன் ” என்று சொல்லிவிட்டு அந்த ஆளுமை நகரும்போது .. சிரித்துக்கொண்டு அமைதியாய் நின்றேன். அதே காட்சியை நான் என் ரசனையில் எடுத்த புகைப்படத்தை அந்த ஆளுமை கேட்கவும் இல்லை. நான் காண்பிக்கவும் இல்லை.
” Many People Want ” A Servant ” from others. Once they Get ” Their Servant ” they Disappear.
Its a Pity that They never Find Who Actually Stands just In front of Them. ”
💐💐💐
கற்றல் பயணம் தொடரும் …
💐💐💐 See Less