Frozen Learning : 002
அது ஒரு அழகான நிகழ்வு. காவல் துறை பற்றி பல பார்வைகள் இருக்கலாம். அதே சமயம் அவர்கள் செய்யும் நல்ல நிகழ்வுகளும் … நம்மால் கவனிக்கப்பட வேண்டும்.
காவல் துறை குடும்ப குழந்தைகளில் சிறப்பாக படிக்கும் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் / அதே போல ஓவியபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் .. கேடயமும் கொடுத்து கௌரவித்தது யார் என்று நினைக்கிறீர்கள் ? ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் அமைந்திருக்கும் சங்கம். ( சக்தி மசாலா வின் Trust ம் இதில் இணைந்து உதவிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறது )
அங்கே பேசிய ஆளுமைகளின் சில வரிகள் உங்களுக்கு பயன்படக்கூடும்.
” நாங்கள் செய்யும் இந்த உதவிகளை எங்கள் பேரப்பிள்ளைகள் கவனிக்கிறார்கள். அவர்களும் செய்வார்கள். “
” Generally Generals never Retire. “
” நாங்கள் Retire ஆனாலும் எங்கள் உடலில் இன்னமும் போலீஸ் இரத்தம் ஓடிக்கொண்டு இருக்கும் “
” அடுத்தது என்ன ? என்பதில் உங்களின் கவனம் இருக்கட்டும் “
நான் பேசியபோது அங்கே எழுதப்பட்டு இருந்த ஒரு குறளையும், Truth Alone Triumphs என்கிற வாசகத்தையும் எடுத்து பேசினேன்.
” ஒரு பள்ளி திறக்கப்பட்டால் 100 சிறைச்சாலைகள் மூடப்படும் “என்கிற பழமொழியையும் கடந்து .. இங்கு பள்ளியில் படிப்பவர்களை பாராட்டும் போது .. நல்ல முன் மாதிரிகள் முன் வரக்கூடும் “
என்று நான் பேசிய வரிகள் மனதில் பட்டதாக அங்கே வந்திருந்த ஒரு பெற்றோர் சொன்னது இன்னமும் மனதில் இருக்கிறது.
” ஒரு தேவை அற்ற விஷயம் நடந்தால் அது மறுநாளே மும்பையில் பேசப்படும். ஆனால் நல்ல நிகழ்வு அடுத்த தெருவுக்கு கூட செல்லாது. இந்த மாதிரியான நிகழ்வுகளுக்கு பொது மக்களை அழையுங்கள். அப்போதுதான் செய்யும் நல்ல விடயங்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். ” என்று நான் சொன்னது காவல் துறையின் எண்ணங்களில் விழுந்திருக்கும்.
” உண்மையாக இருப்பது என்றால் மற்றவர்களுக்கு என்று ஒரு பார்வை இருக்கிறது. அது தவறு. உண்மையாக இருப்பது என்பது நமக்கு நாம் உண்மையாக இருப்பது. படிக்கிற நேரத்தில் படிப்பதில் உண்மையாக இருப்பது, பெற்றோர்களுக்கு உண்மையாக இருப்பது, நட்பு வட்டத்திற்கு உண்மையாக இருப்பது .. என்பது தான் ! ” என்று மாணவர்களுக்கு சொன்ன போது கைதட்டல் யதார்த்தமாய் வந்தது.
இந்த நிகழ்வை முன்னிருந்து நடத்திய அனைவர்க்கும் நன்றி சொல்லி கிளம்பியபோது மனதில் பெரும் நெகிழ்வு. யாரோ ஒரு மாணவனுக்கு இன்றைய நிகழ்வு வேறு பார்வைகளை கொடுத்திருக்க கூடும். அவன் அவள் வளர்வான். ள். அவர்களை ஒரு நாள் நான் மீண்டும் நான் சந்தித்து விட முடியும் என்கிற நம்பிக்கை எனக்குள் நம்பிக்கைச் சிரிப்பை கொண்டு வந்தது.
ஓவிய வெற்றிக்கு முன் மாதிரியாக sahasra வின் Calendar ஐ காட்டி, அதுபற்றி சொல்லி பரிசளித்த போது .. அதற்கும் கைதட்டல் வந்தது. திறமைக்கான கைதட்டல் அது.
Shankara Narayanan
Anuthama Radhakrishnan
Kovai Anuradha Kovai
Ram Kumar
Nirupama Radhakrishnan
Anupama Ramkumar
Kamala Mami
.. நீங்கள் எல்லாம் அங்கே இருந்து அந்த கைதட்டலை கேட்டிருக்க வேண்டும். ஆம். திறமை அங்கீகரிக்கப் படுவதை பார்ப்பது பெரிய மகிழ்வு. சில கைதட்டல்கள் பகிறப்படும்போது இன்னமும் அழகாகும். வாழ்த்துக்கள் சஹஸ்ரா விற்கு.
Commissioner சொன்ன ஒரு வரி …
” அழகாக இருக்கிறது. தேதி இல்லாது இருந்தால் எப்போதும் வைத்து கொள்ள வசதியாக இருக்கும் “
DSP சொன்ன வரி ..
” 6 மாதங்களை ஒரே பக்கத்தில் கொடுத்திருந்தால் 06 வருடங்களுக்கு எங்களுடன் இது பயணிக்குமே ! “
திறமையை கவனிக்க ஆரம்பித்து விட்டால் வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது !






