Frozen Learning : 003
#FrozenLearning ; 003
” If Understanding is the Language, Then, There will be Muted Smiles Everywhere ! “
75 வருட வாழ்க்கை. அதில் திருமண இணை சேர்ந்த வருடங்கள். இந்த 75 வருடங்கள் எத்தனை விதமான சிறப்பான, சிறப்பில்லாத, நிலையான, நிலையற்ற, மகிழ்ந்த, சோகமான, பிறப்பினை, இறப்பினை, பிரிவை, சேர்தலை .. பார்த்திருக்கும் ? எத்தனை அனுபவங்கள் இந்த ஆளுமைகளுக்குள் இன்னமும் உயிர்ப்புடன் வாழ்ந்திருக்கும் !
Kovai Anuradha Kovai
வின் 76 ஆவது பிறந்த நாள் விழா – விஜய ரத சாந்தி – யில் கலந்து கொண்ட போது – அவர்கள் இருவரை கவனித்தல் மிக இயல்பாகவே நடந்துகொண்டிருந்தது. யதார்த்தமாக, நகைச்சுவையுடன், பேசுவது தான் அவரின் இயல்பு. உள்ளதை அப்படியே நகைச்சுவையுடன் பேசிவிடுவதால் தான் அவர் அவராகவே அதே இயல்பில் இத்தனை வருடங்களுடன் அப்படியே இருக்க முடிகிறது.
உடன் பயணிக்கும் துணை தான் என் ஆச்சர்யம். அதிகம் பேசுவதில்லை. ஆனாலும் அனைத்தையும் சரியாக கவனித்து கொள்ள முடிகிறது. அதுவும் சிரித்த முகமாக. அங்கே தான் நான் மேலே சொல்லும் ஆங்கில வரிகள் முன்னே வருகிறது. புரிதல் இருந்தால் பேச்சு தேவையா என்ன ?. துணைக்கு ஒரு கடின நேரம் வரும்போது .. பக்கத்தில் இருந்து கவனித்த அந்த சிறந்த எண்ணத்திற்கு இந்த விழா ஒரு மகுடம்.
இருவருக்குமான பயணம் இன்னமும் இனியதாக நடக்கட்டும்.
” When Hands Connect with each other, They Speak Silence. Because .. They know Their Nature is to Support “
இந்த புகைப்படம் எனக்கு மிக நெருக்கமான ஒன்று. பூமாலை / பூக்கள் தாங்கிய தாம்பால தட்டினை அவரின் இரு கைகள் தாங்கிப் பிடிக்கும்போது .. தேவையான ஒரு கை மட்டும் கொடுத்து நிற்கும் இணை தான் இந்த படத்தின் அச்சாணி. இந்தப் பூக்கள் அவர்கள் இருவரின் வாழ்க்கைக்கான Representation. சில கணங்கள் நம் வாழ்வில் மீண்டும் வர கிடைக்காதவை. இத்தருணம் .. அப்படி ஒன்று. தாங்கி பிடித்தலில் தேவையான அளவும், அமைதியாக .. நிற்கும் அவர்களை மீண்டும் மீண்டும் பூக்கள் வந்து தழுவிக்கொள்வது இயற்கையால் அழகாக நடத்தப்படும்.
வாழ்த்துக்கள்
.
” Some Moments are Rare. To Get them You have to Travel for Years with a Broad-minded Silence “
Frozen Moments – தொடரும் …





