நான் எனப்படும் நான் : 109
” If You dont Like, Say You Dont like and Leave. Never Act as If You Like and Play dual Role. Staying Transparent is the First Learning of All. “



Corporate நிகழ்வு அது. நிர்வாகம் அடுத்த உயரம் அடைய Training கிற்கு அழைக்கிறது. Training நடக்கிறது. மறு பார்வைகள் Team க்கு கிடைக்கிறது. Team அழகாக முன்னேறுகிறது. Numbers மாறுகிறது. வளர்ச்சி வருகிறது. இப்போது நிர்வாகம் ஒரு முடிவை எடுக்கிறது. அது Team ன் வருமானத்தில் கை வைப்பதாக இருக்கிறது. எப்போதுமே Team ன் வருமானத்தில் கை வைக்கும் எந்த நிறுவனமும் வெற்றி பெற்றது இல்லை. கொடுப்பது குறைவாக இருப்பது தவறில்லை. ஆனால் கொடுத்த பின் குறைப்பது சரியான பார்வை இல்லை. வெளிப்படையாக எச்சரிக்கை செய்தால் கேட்கவில்லை. நான் வெளியேறுகிறேன். Team Collapse ஆகிறது.
” Good Business has Three enemies.
1. Mad Management. 2. Mad Management. 3. Mad Management. “



நிர்வாகத்தில் Business Development இல் இருந்து ஒரு நிகழ்வு. Franchisee வழங்கி முன்னேறும் நிறுவனம் அது. ஒரு கட்டத்தில் அது Franchisee க்களிடம் இருந்தே பணத்தை திட்டமிட்டு எடுக்க நினைக்கிறது. ” கிளையில் அமர்ந்து கிளையை வெட்டுவதற்கு சமம் ” இது என்று என் எச்சரிக்கையை பதிவு செய்கிறேன். Management கேட்கவில்லை. சில Useless சமாதானங்கள். விளைவு ?. நான் Bye சொல்லி விலகுகிறேன். Franchisee களுக்கு நிறுவனத்தின் திட்டம் தெரிய வருகிறது. வளர்ச்சி சரிகிறது. வியாபாரத்தில் இப்போது தடுமாறிக்கொண்டிருக்கிறது.
” If You want to Stop Your Growth, Stay with Non Transparent Policies. And .. Demolish the Castle “



அது ஒரு பள்ளி நிர்வாகம். தன்னுடையை Teachers க்கு Training வேண்டும் என்று அழைக்கிறது. ஆனால் நான் கவனித்தவரை .. Management தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பது போல இயங்குகிறது. அவர்கள் பிரச்சினைகளை கவனித்த பின், ஆசிரியர்களிடம் ஒரு முதல் கட்ட பேச்சு நடத்திய பின் .. ” இங்கே முதலில் திருந்த வேண்டியது Management தான் ! Its always from the top First ” என்று சொல்கிறேன். ஆனால் management ” நாங்கள் சொல்வதை மட்டும் செய்தால் போதும் ” என்கிறது. Poor Strategy என்று சொல்கிறேன். கேட்கவில்லை. சரியாக ஒரு வருடம். நிர்வாகம் Teachers கிடைக்காமல் தடுமாறுகிறது. நிர்வாகத்தில் ஒருவரை பொது இடத்தில் சந்திக்க நேர்கிறது. ” நீங்கள் சொன்னது சரிதான் ” என்கிறார். நான் சிரித்துக்கொண்டே சொன்னேன். ” அது இருக்கட்டும். நீங்கள் அனைவரும் செய்தது தவறு. தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் தெரியும் – நீங்கள் செய்வது தவறு என்பது ! ஆனால் வெளிப்படையாக இல்லை. Top level ல் வெளிப்படையாக இல்லாத நீங்கள் தான் Teachers வெளிப்படையாக முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்கிறீர்கள். வாய்ப்பே இல்லை. “
” Stay Useless . Then .. Never Expect Standards. “



சொல்வதை புரிந்து, implement செய்து .. சிறப்பாக வந்த நிறுவனங்களும் உண்டு. அடுத்தமுறை பகிர்கிறேன்.


