யதார்த்தம்பழகு : 005
” Stay In Self Alignment. Speak Certainty. “



ஒரு நிலம் சார் பிரச்சினை. சம்பந்தப்பட்டவர்கள் வேறு ஏதோவெல்லாம் பேச, அதில் என் நட்பு பக்கம் நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றியது. ஆனால் மற்றவர்களுக்க்கு .. நட்பு பக்கம் தவறு இருப்பதாக தோன்றியது. அதை அவர்கள் தெரிவிக்க ஆரம்பித்ததும் .. சட்டென எழுந்த நட்பு …
” எனக்கு இந்த நிலம் விஷயத்தில் எனக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்லுங்கள். நான் இப்போதே இங்கே இருந்து கிளம்புகிறேன் ” என்று பொறுமையாக ஆனால் உறுதியாக சொன்னார்.
நட்பு மேல் தவறு என்று சொல்ல வந்தவர்கள் ஆடிப்போனார்கள். இப்போது பொறுமையாக நட்பு பக்கத்தை கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கும் நட்பு பக்க சரி என்னவென்று புரிந்தது. பிரச்சினை முடிவுக்கு வந்தது. வீம்பு பேசியவர்கள் விலக, கிளம்பும் முன் நட்பு சொன்னார்.
” என் பக்கம் சரி என்று எனக்கு தெரியும். நீங்கள் நியாயம் பேசினால் இங்கே இருக்கலாம் என்று நினைத்தேன். அநியாயம் பேசினால் … ? காலத்தின் பக்கம் பதிலை கொடுத்துவிட்டு கிளம்பி இருப்பேன். நியாயம் இல்லாத தற்காலிக வெற்றிகள் என்னை பாதிப்பது இல்லை. அதே சமயம் நியாயமானவை எப்போதும் தோற்பது இல்லை. தோற்பது போல தெரியும். ஆனால் காலம் என்னுடன் கூட்டணி வைக்க என்னை select செய்யும். காலத்துடன் கூட்டணி வைப்பவர்கள் தோற்பது இல்லை. தற்காலிக சூழ்நிலைகளுடன் கூட்டணி வைப்பவர்கள் பெறும் வெற்றி நிலைப்பது இல்லை. “
என்று பேசிவிட்டு வெளியே வர …
உள்ளே ஒருவர் பேச ஆரம்பித்தது என் காதில் விழுந்தது.
” நான் இப்போதே இங்கிருந்து கிளம்புகிறேன் “என்று அவர் சொன்ன குரல் இன்னமும் காதில் ஒலிக்கிறது. அவரை பற்றி மற்றவர்கள் சொன்னது சரியில்லை என்று இப்போது புரிகிறது. இப்போது புரிகிறது ! “
நட்பு பேசிய குரல் இன்னமும் எனக்குள்…..
” எனக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்லுங்கள் .. இப்போதே இங்கே இருந்து கிளம்புகிறேன். “



” When You Stand Right according to Your Conscience, Nothing Affects the End Result. If so, Time will get it back FOR YOU, WITH OR WITHOUT YOU ! “


