யதார்த்தம்பழகு : 006
” Nature is Such a Force. It brings Needed to the Right Sources in Right Time ! “



” எங்கே சில நாட்களாக காணோம் ? “
கொஞ்சம் அமைதியாய் சிரித்து சொன்னார் ..
” ஆஞ்சியோ செஞ்சுருக்கேன் சார். Hospital ல இருந்தேன் சார். அப்புறம் …10 நாள் rest ல இருந்தேன். இப்போ ok வா இருக்கேன் ன்னு சொன்னாங்க. சரி ன்னு வேலைக்கு வந்திட்டேன். “
சொன்னவர் Security. கொஞ்சமாய் அதிர்ந்து கேட்டேன் ..
” Insurance இருக்கா ? “
” இல்ல சார். 1.90 வரை செலவு. Government பணம் 55 கிடைச்சுது. “
விரக்தியாய் சிரித்தார்.
” உடல் எடையை குறைக்க சொல்வீங்க. இப்போ புரியுது சார் “
இருவரும் சிரித்தோம்.
” சர்க்கரையை குறைச்சிட்டேன் சார். ஆனால் இன்னமும் குறைக்கணும் “
” பார்த்துக்கங்க ” என்று சொல்லிவிட்டு Car நோக்கி நகர்ந்தேன்.
” People understand some learning when they face their tough times ! “



மனதில் சில கேள்விகள். சில பதில்கள். “
” என்னுடைய Medical Insurance முகவர் ஐ தொடர்பு கொள்ள வேண்டும். இரு Securities / இரு Sweepers / வீட்டிற்கு வரும் வேலைக்கார அம்மா .. அனைவர்க்கும் Insurance இருக்கிறதா என்று கேட்டுவிட்டு, இல்லையெனில் போட வேண்டும். போட்டு கொடுக்க வேண்டும். அவர்களுக்கான அக்கறையாக அது இருக்கட்டும். “
Car start செய்து இப்போது பயணித்து கொண்டிருக்கிறேன்.
” 1.90 வரை செலவு ” என்று சொன்ன அந்த security யின் விரக்தியான சிரிப்பு மீண்டும் மீண்டும் எனக்குள்.
மனிதர்களுக்கு தங்களை கவனித்து கொள்ள தேவைப்படும் போது .. பணம் இல்லை எனில் .. விரக்தி இயல்பாய் வந்துவிடுகிறது. அத்துடன் அந்த சிரிப்பும் !
ஆனாலும் இயற்கை சரியான மனிதர்களை அவர்கள் வசம் கொண்டு வந்து சேர்த்துக்கொண்டே இருக்கிறது ! இருக்கும் !
” When Human gets Humanity, Life stays as a Blessing “



உங்கள் வீட்டில் / உங்களுக்கு அருகாமையில் securities இருக்கிறார்களா ? Apartment / வீடு கூட்டும் / வீட்டு வேலை செய்யும் .. மனிதர்கள் உண்டா ? அவர்களுக்கு மிச்ச சாதம் குழம்பு / பழம் / கொடுப்பது எல்லாம் இருக்கட்டும். அவர்களுக்கு Medical Insurance கொடுக்கலாம் என்று தோன்றுகிறதா ? அது இருக்கட்டும். முதலில் உங்களுக்கு / உங்கள் குடும்பத்தினருக்கு இருக்கிறதா ?
” Some Questions require instant Actions ! “


