Frozen Learning : 007



Shuttle விளையாட்டு என்னுடன் இயல்பாக கலந்த ஒன்று. நீண்ட நாளைக்கு பின் சிவகங்கையில் !
இன்னமும் ஞாபகம் இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் Civil Court க்கு அருகில் ஆடுகளத்தில் .. ஆரம்பித்த இந்த ஆட்டம், almost என்னுடைய பயணத்தில் இந்தியா முழுக்க தொடர்ந்து இருக்கிறது. மத்திய பிரதேச இந்தூரில் தான் அதிக நாள் ஆட்டம். கிட்டத்தட்ட 03 வருடம். அடுத்தது மதுரையில். அங்கே ஆடும் விருமாண்டி என்கிற ஆளுமையின் ஆட்டத்திற்கு நான் ரசிகன். இடையிடையில் .. டெல்லி அகமதாபாத் மும்பை கௌஹாத்தி .. என்று செல்லும் இடங்களில் எல்லாம் Shuttle மட்டை கூடவே பயணிக்கும். என்னவோ தெரியவில்லை .. 2012 க்கு பின் ஆடவில்லை. பயணங்கள் அதிகமானதும் காரணமாக இருக்கக்கூடும். அப்படி ஆடிய ஆட்டங்களில் .. ஆட்டம் முடிந்து முழுவதுமாக நனைந்து .. திரும்ப வரும்போது முகத்தில் அறையும் காற்றுக்கு இணை ஏதும் இல்லை !
என்னுடைய Style Partly offence, Rally, Drop மற்றும் Movements. Deceptive Game தான் Shuttle ல் அழகு. தன் Energy யை save செய்துகொண்டே எதிர் தரப்பின் energy யை .. ஆட்டத்தில் உபயோகப்படுத்துவது ஒரு கலை. சிரித்த முகத்துடன் ஒருவரால் Shuttle ஆடமுடியும் எனில் .. அவர் அந்த ஆட்டத்தில் முதிர்ச்சியை நோக்கி நகர்கிறார் என்று அர்த்தம். கோபப்பட்டு, சத்தம் போட்டு, குறை சொல்லி, வெறுப்பாக ஒருவரால் இந்த விளையாட்டை விளையாட முடியும் எனில் .. அவர் இன்னமும் ஆரம்ப நிலையிலேயே இந்த விளையாட்டில் இருக்கிறார் என்றே அர்த்தம்.
Wood Court தான் என் fav. Cement டில் ஆடுவதும், சமதளம் அற்ற மண்ணில் ஆடுவதும் Dangerous. எல்லை வகுத்திருக்கும் அந்த Court ல் … தன் எல்லையை வகுத்துக்கொண்டு, partner க்கு support செய்து, தவறு செய்யும்போது sorry சொல்லி, சரியாக ஆடும்போது Appreciate செய்து … இந்த விளையாட்டில் கணவன் மனைவி உறவு கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய !
Kumar Thinker
க்கு நிறைய நன்றிகள். ALmost மறந்தே போயிருந்த ஓர் திறமையை மீண்டும் மீட்டு எடுத்திருக்கிறார். இந்த விளையாட்டில் .. அடுத்த பரிணாமம் ஒன்று காத்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.


