Frozen Learning : 009
” When We See What’s In front of us as The Representation of Nature, God Sits in the Back Seat “



” உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதே ? பிறகு எப்படி …விபூதி இடுவது எல்லாம் ? “
கேட்டவரின் கேள்வி சிரிப்பையே ஏற்படுத்தியது. கடவுள் நம்பிக்கைக்கும் விபூதி இட்டுக்கொள்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் ?
” People Relate And Confuse. I Stand on What I am and set myself Free ! “



அந்த மனிதர்க்கு 70 வயது இருக்கலாம். அங்கே இருக்கும் கடவுளுக்கு அவர் தான் எல்லாம். கடவுளின் Rep ஆன சிலையை கழுவி, துடைத்து, வண்ணமிட்டு, மாலையிட்டு, கடவுளை மற்றவர்களின் கண்ணுக்கு அழகாக காட்டும் மரியாதையான வேலையை செய்து கொண்டே இருக்கிறார் – வருடக்கணக்கில்.
அவர் இல்லை என்றாலும் கடவுள் இருப்பார் ! ஆனால் .. அவர் இருந்தால் கடவுள் காட்சிக்கு அழகாக இருப்பார் !! அப்படி ஒரு மனிதர் அவர்.
” என்ன வயசிருக்கும் உங்களுக்கு ? “
“70 / 72 “
” இங்கே தானா பிறந்ததில் இருந்து ? “
” ஆமா .. இங்கேயே தான். பிறந்தது வளர்ந்தது எல்லாம் இங்கேயே தான் “
” இங்கே வருகிறவர்களுக்கு பூஜை செய்து .. இதே தான் வாழ்க்கை .. இல்லையா ? “
” ஆமா… வர்றவங்க நல்லா இருக்கனும் “
நான் அமைதியானேன்.
பூஜை செய்து மற்றவர்களுக்கு விபூதி தட்டை நீட்டி .. என்னிடம் வந்தபோது சொன்னேன் ..
” நீங்களே இட்டு விடுங்கள் “
ஒரு கணம் நிலைத்து, அடுத்த கணம் சிரித்தார்.
” வர்றவங்க நல்லா இருக்கணும் னு நினைக்கிற கையால பூசிக்கிறேன் “
சொன்னதும் அவருக்கு மகிழ்ச்சி.
எனக்கு நீறு இடும்போது அவரின் கை நடுங்குவதை கவனித்தேன்.
” நல்லா இருக்கணும் ” என்று முனகலில் வருகிறது வார்த்தைகள் !
” When the Intent is Clear, Language Becomes Beautiful “



” உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதே .. பிறகு எப்படி விபூதி எல்லாம் ? “
என்று கேட்டவரிடம் மேற்சொன்னவற்றை பகிர்ந்துவிட்டு சொன்னேன்.
” அங்கே விபூதி இடுதல் என்பது அவரின் ” வர்றவங்க நல்லா இருக்கணும் ” என்கிற எண்ணத்திற்கான மரியாதை ! அவ்வளவே. “
கேள்வி கேட்டவர் புரிந்து பின் சிரித்தார். ( பொதுவாக கேள்வி கேட்பவர்கள் புரியாததால் தான் கேள்வி கேட்கிறார்கள். புரிந்து கேள்வி கேட்டால் அது புரிதலை இன்னமும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் ! ).
” You See God in Everything. I see Humanity in everything. In a way, We both are Same. “



கிளம்பும்போது அந்த 70 வயது ஆளுமையிடம் சொன்னேன் …
” கிளம்பறேன். மீண்டும் வர்றேன். வருவோம் “
அவர் சிரித்து சொன்னார்
” வர்றவங்க நல்லா இருக்கணும் “
( ஆம். தீரா உலாவிற்கு வருகிறவர்கள் இந்த மனிதரை பார்க்க கூடும். )
” We always get Forecast. What we miss is .. to identify it as a Forecast ! “



பயணிப்போம். #வாழ்வாங்குவாழ்வோம்.