நான் எனப்படும் நான் : 110



நேரடியாக Sessions – கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பின். சிவகங்கை யில் ஒரு mini 30 mins session க்கு பின் Zenlp க்காக official ஆக இன்று மீண்டும் தொடக்கம்.
பொதுவாக Session என்றால் எனக்கு Online Zoom Link வரும். அப்படி இன்று காலை எதுவும் வரவில்லை என்பதே பெரும் வித்தியாசமாக உணர முடிந்தது. Sessions ஆரம்பித்து சில நிமிடங்களுக்கு பின் வழக்கமான Jay வெளியே வர .. உள்ளுக்குள் அவ்வளவு மகிழ்ச்சி. கிட்டத்தட்ட 11 மாதங்கள் online ல் laptop screen சிறையில் இருந்ததில் இருந்து என்னை நானே வெளியே கொண்டு வந்த கொண்டாட்டமும் முகத்தில்.
Online session ல் சில சௌகர்யங்கள் இருக்கலாம். ஆனால் பல அசௌகரியங்கள். ஒரு Trainer ஆக .. முகம் வரை மட்டுமே உடல்மொழியை காண்பிக்க முடியும். ( மிஞ்சிப்போனால் கொஞ்சம் தோள்பட்டை வரை ! ). மற்றபடி Arrested உடல்மொழி தான். அதில் தான் #5pmlive நடந்தது. அதிலும் என் முகத்தை பார்த்து நானே பேசும் Monologue style வேறு ! இத்தனைக்கும் நடுவில் தான் 200 plus live. ஒரு நல்ல சிந்தனையுடன் துவக்கப்பட்ட அந்த நிகழ்வு என் வரலாற்றில் 2020 ஐ மறக்க முடியா வருடமாக மாற்றி இருக்கிறது.
நேரடியான sessions ல் முழு உடல்மொழிக்கும் முழு வாய்ப்பு. நிற்க நடக்க வெளியே சென்று sessions செய்ய … live ஆக நடக்கும் விஷயங்களை கற்றலாக அலச .. எதிர்வரும் மனிதர்களை படிக்க … எவ்வளவு பெரும் பொக்கிஷம் இந்த Live Sessions ! Online ல் பார்த்த Jay யை Live இல் பார்க்க வாய்ப்பில்லை. நேரடியான Live இல் இருக்கும் போது சிந்தனைகள் வேறு உயரத்தில் !
இன்றைய Zenlp Counsellors க்கான sessions ல் – Non Performance to Performance / An Unrest Way of Living ! – என்கிற session ல் என்னுடைய covid க்கு முந்தைய வேகம், வித்தியாச பார்வை, மாறுபட்ட அணுகுமுறை, Creative Challenges அனைத்தும் வெளியே வந்தது. அப்படி வந்தபின் என்னை நான் கண்ணாடியில் பார்த்துக்கொண்ட போது உள்ளே ஒலித்த குரல் தான் இந்தப் பதிவு ! அந்தக் குரல் …
” Covid 19 க்கு நன்றி. புதிய கற்றலுக்கும், ஏற்கெனவே இருக்கும் கற்றலை மீண்டும் உயிர்ப்பித்தலுக்கும் ! “



#தீராஉலாfeb2021 அடுத்த பரிமாணம். அங்கேயும் நேரில் சந்திப்போம். பயணங்களில் ஒரு Advantage .. என்னவென்றால் .. அவற்றை Zoom Live ல் செய்ய முடியாது. பார்க்க முடியாது. பேச முடியவே முடியாது !
நேரில் சந்திப்போம்.


