நான் எனப்படும் நான் : 113
மக்களை கவனித்தால் சில விடயங்கள் நமக்கு புலப்படும்.
1. மக்களுக்கு நல்ல விஷயங்கள் நல்ல சூழ்நிலைகள் நல்ல மனிதர்கள் நல்ல முன்னுதாரணங்கள் ” கண்டிப்பாக ” தேவை !
2. மக்களுக்கான விஷயங்கள், சூழ்நிலைகள்,.முன்னுதாரணங்கள், மனிதர்கள் அவர்கள் ” நினைப்பது போல ” தேவை.
3. மக்களுக்கான விஷயங்கள், சூழ்நிலைகள், முன்னுதாரணங்கள், மனிதர்கள் … ” எப்போதும் “
தேவை.
4. அனைத்தையும் விட முக்கியமான ஒன்று .. மக்களுக்கான விஷயங்கள்,சூழ்நிலைகள், முன்னுதாரணங்கள், மனிதர்கள்
” 100 % சுத்தமாக “
தேவை !
ஆச்சர்யம் என்னவெனில் .. இப்படியான demand இருப்பதால் தான் மக்களுக்கு அவை கிடைப்பதில்லை ! 





” Ever Demanding never gets Ever Winning ! “



சிலர் பொது வாழ்க்கைக்கு நல்ல எண்ணங்களோடு வருவார்கள். நல்ல விஷயங்களையும் செய்வார்கள். உடனே மக்கள் அவர்களுக்கு ஒரு அளவுகோல் வைக்க ஆரம்பிப்பார்கள். இங்கே தான் பிரச்சினை ஆரம்பம். பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் ” இப்படித்தான் இருக்க வேண்டும் ” என்று கட்டளைகளை வகுத்துக் கொள்வார்கள். பிறகு அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு பாடம் நடத்த முயற்சிப்பார்கள். பொது வாழ்விற்கு வந்த நிறைய நல்ல மனிதர்கள் இப்படியான சூழ்நிலைகளை விரைவாகவோ அல்லது சிறிது கால தாமதமாகவோ எதிர்கொள்வார்கள். இதையும் சிரித்து கடந்து பொது வாழ்வில் இருப்பவர்கள் பெரும் ஆளுமைகள். இந்த சூழ்நிலைகளை சந்திக்க வேண்டாம் என்று நினைத்து தன் வாழ்க்கையில் கவனம் செலுத்துபவர்கள் .. அவர்கள் முன்னேறுவார்கள். மக்கள் ? 

.



” People Measure with Wrongs Stick to get back Negativity “



” மக்கள் அப்படித்தான். குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நோக்கங்களுக்கு தவறான வண்ணம் பூசுவார்கள். நல்லது செய்ய நினைப்பவர்கள் தான் பொறுத்து போக வேண்டும் ” என்று சொல்பவர்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது எனக்கு. என் நேரடியான பதில் … ” அப்படியெல்லாம் இருக்க வேண்டிய செய்ய வேண்டிய பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவரவர்க்கு ஆயிரம் கடமைகள் இருக்கிறது. வேலைகள் இருக்கிறது. நல்லது செய்ய வருபவர்களுக்கும் இவை உண்டு. அந்த கடமைகளை செய்ய அவர்கள் சென்று விடுவார்கள். அப்படியானால் மக்கள் ?
ஹாஹாஹா. மீண்டும் demanding ஆரம்பிக்க வேண்டியது தான். மீண்டும் யாரோ சிலர் வருவார்கள். விலகுவார்கள்.
இவை அனைத்திலும் ஒன்று நிச்சயம். மக்களில் எந்த Contribution ம், வேலையும் செய்யாதவர்கள் தான் இப்படியான நல்ல மனிதர்களை நோக்கி கல் எறிகிறார்கள். ஆனால் ஆச்சர்யம் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது.
” இங்கே கல் எறிபவர்களுக்கு மட்டுமே இழப்பு. ! “
” Life Gives back to the Contributors. Not to the Questioners ! “


