நான் எனப்படும் நான் : 114
” Mom Is a Good Feel Whether We are Happy, Sad, Normal and Abnormal “
” நல்லது செய்து கொண்டே இரு. சரியான மனிதர்கள் மட்டுமே உடன் இருப்பார்கள். மற்றதை பற்றிய கவலை வேண்டாம் ! “
நீறு இட்ட பின் அம்மாவின் வரிகள். வழக்கம்போலவே சிரித்து கொண்டே கேட்டுவிட்டு .. கிளம்ப எத்தனித்த போது அம்மா மீண்டும் சொன்னது ..
” எதைப்பற்றிய கவலையும் வேண்டாம். அனைத்தும் சரியாகவே நடக்கும் “
அம்மா எதை சொல்கிறாள் என்று எனக்கு தெரியும். எனக்கு தெரியும் என்று அவளுக்கும் தெரியும். எது என்பதை பற்றி பேசாமாலே அதைப்பற்றி பேச நல்ல புரிதல் வேண்டும். அந்த புரிதல் தான் அம்மா !
” When you understand well, Subject is irrelevant. Intent is enough ! “
” வீட்டுக்கு சென்ற பின் Phone செய்து சொல்லு. காத்துகொண்டு இருப்பேன் “
அவளுக்கு நான் இன்னமும் குழந்தை தான் ! வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் கூப்பிட்டு சொன்னேன்.
” சாப்பிட்டியா ? “
அவளின் அடுத்த கேள்வி. அம்மாக்களை போல Virtual Care Radars. உலகில் இல்லை. இல்லவே இல்லை !
2019 ம் வருடம் இதே நாளில் அவளை பார்த்து விட்டு எடுத்த புகைப்படம் ( நீல T Shirt ல் ) … இங்கே இணைத்திருக்கிறேன். அப்போதும் மேற்சொன்ன அதே care தான் அவளிடம் ! அம்மாக்கள் மாறுவது இல்லை. அம்மாக்களின் care ம் !






