நான் எனப்படும் நான் : 115
” Time Never Heals Anything. It settles everything. “
காலம் மிக அழகான ஒன்று. எல்லாவற்றையும் கவனித்து வைத்து கொள்ளும். பிறகு சரியான நேரத்தில் தான் கவனித்தவற்றுக்கு தகுந்தவாறு கணக்குகளை நேர் செய்யும். அதற்கான விளக்கங்களை அது யாருக்கும் கொடுக்காது. கொடுக்கவும் தேவையில்லை. ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்த கணக்குகள் நேர் செய்யப்பட்டு இருப்பது புரியும்.
” Silence has Many Meanings. “
சில நேரங்களில் வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி, பதிலுக்கு பதில் .. என்பதை விட .. காலத்திடம் பொறுப்பை கொடுத்துவிட்டு பயணிப்பது அறிவிற்கு மட்டும் அல்ல, ஆன்மாவிற்கும் நல்லது.
ஒரு முறை நிலக்கடலை விற்கும் மனிதரிடம் பேசிக்கொண்டு இருந்த போது ஒன்றை சொன்னது இப்போது நினைவில் ..
” குடித்து விட்டு தினமும் வந்து என்னிடம் பிரச்சினை பண்ணிக்கொண்டே இருப்பார் ஒருத்தர். எவ்வளவோ எடுத்து சொன்னாலும் கேட்க மாட்டார். கடலை வாங்கி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மாட்டார். ஆனால் உலக நியாயம், அரசியல் எல்லாம் பேசுவார். நியாயமே இல்லை என்று தெரியும். ஆனாலும் .. அமைதியாக இருந்தேன். பிறகு திடீரென்று அவரை காணோம். என்ன ஆச்சுன்னு தெரியலை. சில மாதங்கள் கழித்து ஒரு நாள் பார்த்தேன். குடிச்சிட்டு சாலையில் நடக்கும்போது ஏதோ வண்டி மோதி .. கால் உடைந்திருக்கிறது. இனி தாங்கித் தாங்கிதான் நடக்க வேண்டும் ! அதே கால் தான் இங்கே எனக்கு அனைத்து பிரச்சினையும் செஞ்சுச்சு. ஆனாலும் மனசுக்கு வருத்தமா தான் இருக்கு. கால் போனா வராது இல்லையா சார் ? “
நான் எதுவும் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் .. மனதுக்குள் ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுந்தது.
” இந்த கணக்கை எல்லாம் மனதில் வைத்து தீர்க்கும் அளவிற்கு அவ்வளவு Powerful ஆன ஒன்று காலம் எனில் .. அதை தானே நாம் கும்பிட, பின் தொடர, உடன் வைத்துக்கொள்ள வேண்டும் ? “
” When You don’t have anyone, Have Time as Your Bestie. It certainly Justifies Your Selection ! “





