நான் எனப்படும் நான் : 117
” Disturb the Flow, Disturb the Momentum & Stay Normal. Being in Extraordinary League is not for you ! “



அது ஒரு சிறப்பான நிர்வாகமாக மாறிக்கொண்டு இருந்தது. அந்த நிர்வாகத்தை அதன் மேல்நிலை மேலாளர் அழகாக, திறன்பட, சரியான நேர முடிவுகளுடன் முன்னேற்றி கொண்டு இருந்தார். ஆனால் அங்கும் …. வழக்கமான உலக விதிகளின் படி .. அப்படி சிறப்பாக இயங்கி கொண்டு இருந்த அவருக்கு சில பிரச்சினைகள் சிலரால் வந்தது.
சரியாகவே முடிவுகளை எடுத்துக்கொண்டு இயங்கிக்கொண்டு இருந்தவரை, சில நிகழ்வுகளை வைத்து அந்த நிர்வாகத்தில் இருந்த ( எந்த வேலையையும் ஒழுங்காக செய்யாத ) சிலர், தேவையற்ற பிரச்சினைகளை பெரியதாக்கி அவரின் focus ஐ தடுமாற செய்துகொண்டிருந்தனர். அப்போது தான் நான் Training கிற்கு அழைக்கப்பட்டு இருந்தேன்.
பயிற்சி வகுப்பில் சில sessions க்கு பிறகு, நான் முதலில் கவனிக்க ஆரம்பித்தது ” பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த மனிதர்களைத் தான் ! ” ( பொதுவாகவே பிரச்சினைகளை ஏற்படுத்தும் மனிதர்களை Trainers மிக விரைவாகவே அடையாளம் கண்டுகொள்வார்கள் ! ). அவர்களிடம் சில கேள்விகளை சிரித்து கொண்டே வைத்தபோது .. அவர்களிடம் ” ஹி ஹி ” என்ற வழிதலை தவிர வேறு எந்த பதிலும் இல்லை ! அந்த கேள்விகளை இங்கே பகிர்கிறேன். உங்களின் நிர்வாகத்திலும் இந்த கேள்விகள் உதவக்கூடும் !
” சரி … அவர் சரியில்லை. அந்த பொறுப்பை யார் ஏற்கிறீர்கள் ? ஏற்ற பின்பு Turn Over மற்றும் இலாப விகிதத்தில் நீங்கள் கொண்டு வரும் மாற்றம் என்னவாக இருக்கும் ? “
” சரி … அவர் சரியில்லை. உங்களில் யாரோ ஒருவர் அந்த பொறுப்பை ஏற்பதாகவே வைத்துக்கொள்வோம். அப்போது .. இப்போது நீங்கள் பேசுவது போல யாரும் உங்களின் பின்னால் பேச மாட்டார்கள் என்ற உறுதியை உங்களால் கொடுக்க இயலுமா ? “
” அனுபவம் தவறு செய்கிறது என்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் அதை விட அனுபவம் நிறைந்தவர் என்றும் வைத்துக்கொள்வோம். அநேகமாய் நீங்கள் செய்யப்போகும் அடுத்த தவறு என்ன ? ” ( இந்த கேள்வி பலரை மௌனப்படுத்தியது நிஜம் ! )
இப்படி வரிசையாய் கேள்விகள். அனைத்திற்கும் “மௌன ஹி ஹி வழிதல் ” பதில்கள்.
சிரித்து விட்டு சொன்னேன்.
” உட்கார்ந்து கொண்டு ஓடும் குதிரையை பற்றி பேசுவது எளிது. அதைவிட இந்த குதிரை சிறப்பு என்று புள்ளி விபரங்கள் கொடுப்பதும் எளிது. ஓடும் குதிரையை நிறுத்தியவுடன், நீங்கள் ஓடவைக்கவிருக்கும் குதிரையின் ( untested ! ) Performance ஐ நிச்சயம் நன்றாக வரும் என்று நம்ப முடிந்த உங்களால், ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையை இன்னமும் சிறப்பாக ஓடவைக்க ஏன் யோசிக்க முடியவில்லை. ? “
அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.
” காரணம் மிக எளிது. உங்களுக்கு பிரச்சினை குதிரை மேல் அல்ல. அந்த குதிரையின் மேல் அமர்ந்து இருக்கும் Jockey யின் மேல். அவரின் இயக்கம் உங்களுக்கு மன நல பிரச்சினை ! அவ்வளவே ! “
அவர்களின் தேவையற்ற பிரச்சினைகளால் சோர்ந்திருந்த நிர்வாகம் இந்த sessions க்கு பின் மீண்டும் இயங்க ஆரம்பித்தது. இன்னமுமே சிறப்பாக வந்தது. குறை சொல்லிக்கொண்டிருந்தவர்களில் பலர் வெளியேறினார்கள். சிலர் வெளியேற்றப்பட்டார்கள். மிகச்சிலர் மட்டுமே மாறி இருந்தார்கள். அப்படி மாறியவர்களில் ஒருவர் சொன்னார்…
” நீங்கள் கேட்ட அந்த கேள்வி என்னை மிகவும் பாதித்தது. ” நீங்கள் செய்யப் போகும் அடுத்த தவறு என்ன ? ” என்கிற கேள்வி தான் என் வாழ்க்கையை மாற்றியது. ஏன் எனில் அடுத்த தவறு அல்ல, நான் செய்து கொண்டு இருந்ததே தவறு தான் ! அந்த session க்கு பின் நான் சம்பந்தப்பட்ட மனிதரிடம் சென்று மன்னிப்பு கேட்டுவிட்டு அவருக்கு எப்படி உதவலாம் என்று செயல்பட தொடங்கினேன். இன்று நிர்வாகம் மிக நல்லபடியாக வந்திருக்கிறது ! “.



குறை சொல்வது எளிது. குறை சொல்லி சிறப்பாக செயல்படும் மனிதர்களை முடக்கிய பின், அந்த நிர்வாகத்தை எப்படி வைக்கிறோம் அல்லது முன்னேற்றுகிறோம் என்பதே முக்கிய கேள்வி. இயக்கத்தை நிறுத்தியும்விட்டு வெறுமனே பேசிக்கொண்டு இருப்பவர்கள் .. என்னை பொறுத்தவரை …. நிர்வாக சீர்கேடுகள் ! களையப்பட வேண்டியவர்கள். அவர்களை களையவில்லை எனில் அந்த நிர்வாகமும் சீர் கெட்டு போகும் !



உங்களின் நிர்வாகத்தில் அப்படி இருக்கும் மனிதர்களை களைந்து விட்டு … கவனியுங்கள். நிர்வாக இயக்கம் வேகம் பெற்று முன்னேறும். பின்னே ? காலில் கல்லை கட்டிக்கொண்டு 100 meters ஓடுவது புத்திசாலித்தனமா என்ன ?


