நான் எனப்படும் நான் : 116
” Life Settles on Its own. Better You don’t Create New Dust “



வாழ்க்கையின் போக்குகள் வித்தியாசமான ஒன்று. அதுவாக முடிச்சுகளை போட்டு, அதுவாக அவிழ்த்துக்கொண்டு சிரிக்கும் ! அது சிரிக்கும்போது நாம் நம்மை நினைத்தும் சிரிக்கவே தோன்றும் ! வாழ்க்கைக்கு ஓர் பெயர் வைக்க வேண்டும் எனில் …. ” விடுகதைச் சுயம்பு ” என்று வைப்பேன்.
சில நேரங்களில் நடப்பவைகளை கவனித்தால் அதற்கே உண்டான வேகம், கோபம், சோகம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி .. எல்லாம் தானாகவே மனிதர்களுக்கு வந்துவிடும். ( மனிதர்கள் என்றால் வர வேண்டும் ! ). அங்கே அமைதியாக நம்மை கவனிக்கும் வாழ்க்கை காலம் கடந்து .. பின்னே நம் Reactions ஐ நினைத்து சிரிக்க வைக்கும் !
” கடந்து வந்த பின் தான் புரிகிறது. ஆனால் அன்று அதை செய்தது தான் சரி ” என்று ஒரு குரல் நமக்குள் எப்போதும் ஒலிக்கும். அதை கேட்கும் ஒரே உலக சாட்சி காலம் மட்டுமே. பல நேரங்களில் காலம் நாம் செய்தது சரி என்று சொல்லிவிட்டு செல்லும். சில நேரங்களில் மாறுதல்களை செய்யும். மிகச் சில நேரங்களில் … தன் ஆளுமையை கையில் எடுத்து அனைத்தையும் சரி செய்யும். என்ன செய்தாலும் .. காலம் தான் ராஜா ! நாம் அனைவரும் கிளிப்பிள்ளைகள். தனியாக குரல் வைத்திருந்தாலும் காலம் அதட்டினால் அமைதியாவோம்.
காலம் என்னை இப்போது சிரிக்க சொல்கிறது. அப்படி சிரித்த போது எடுத்த தன் நிழற் படத்துடன் … !


