நான் எனப்படும் நான் : 120
” ஆசிரியர்கள் நமக்குள் ஏற்படுத்தும் Positive பாதிப்புகள் நம்முடன் காலத்திற்கும் வருபவை. அந்த திறமைகளுக்கு நாம் வாழும் சாட்சிகள் “



லூர்து சாமி – ஒல்லியான தேகம். சராசரி உயரம். மிதிவண்டியில் மித வேகத்தில் பள்ளி வரும் ஆளுமை. கையில் எப்போதும் ஒரு அரை அடி Scale வைத்திருப்பார். நான்கு வரி note ல் நான் எழுதும்போது வகுப்பில் சுற்றி வந்துகொண்டே இருப்பார். முதல் வரிசையில் அமரும் மாணவன் என்பதால் நான் எழுதும் தொனி அவருக்கு தெரியும். h ன் உயரம் மேல் கோட்டை தொட வேண்டும். g ன் கீழ் முடிவு கீழ் கோட்டை தொட வேண்டும். அதை போல மற்ற எழுத்துகள் அவை அவை அளவிற்கு ஏற்ப நான்கு வரிகளுக்குள் அழகாக இருத்தப்பட வேண்டும். இல்லை எனில் ? கை விரலை நீட்ட சொல்வார். உள்ளங்கை உள்புரமாக வைத்து நீட்டினால் விரல்களின் நடுப்பகுதியில் scale ஆல் அடிப்பார். உயிர் போகும். பயம் தான் மனித ஒழுக்கத்தின் ஆணி வேர். அடிப்பார் என்பதால் ஒழுங்காக எழுத ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது. ஒவ்வொரு முறை எழுதுவதை பார்க்கும் யாரோ ஒருவர் ” கையெழுத்து நன்றாக இருக்கிறதே ? ! ” என்று வியந்து சொல்லும்போது … லூர்து சாமி ஆசிரியர் ஞாபகத்தில் வருவார். கூடவே அந்த மஞ்சள் பழுப்பு நிற Scale ம் !
ஆசிரியர்களின் வழிமுறைகள் /செயல்முறைகள் வேண்டுமானால் விவாதத்திற்கு உரியது. ஆனால் நோக்கம் ?. நிச்சயம் நல்லது. அப்படி லூர்து சாமி ஆசிரியர் அடித்து சொல்லி தரவில்லை எனில் ( அடிக்காமல் அன்பாக சொல்லிக்கொடுத்த ஆசிரியரும் உண்டு. உதாரணம் ரோஸி டீச்சர். ” Help others. And .. Don’t expect Help “. இது அவர்களின் புகழ்பெற்ற வாசகம் ! ) என் கையெழுத்து இப்படி வர வாய்ப்பில்லை. இப்போதும் விரலால் எழுதும் போது அவ்வளவு மகிழ்வாக இருக்கும். PC யில் type செய்யும்போது என்னவோ ஒரு அந்நியத்தன்மை இருக்கும். விரலால் எழுதுதல் என்பது உடல் உணர்வு தொடர். இடையே எந்த machine க்கும் அங்கே தொடர்பில்லை. உணர்வு நேராக விரலின் வழியே மையை அடைந்து வடிவம் எடுக்கும் அழகு தான் என்னே ஓர் அழகு !
ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்த திறமைகள் காலத்திற்கும் நம்முடன் மௌனமாய் பயணிக்கின்றன. அந்த திறமையை கற்பதற்கு நாம் எவ்வளவு சிரமப்பட்டாலும் அந்த திறமை “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ” போலவே நம்முடன் இறப்பு வரை பயணிக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த திறமை கற்றுக்கொடுத்த ஆசிரியரை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
உங்களின் திறமை மூலம் உங்களின் நினைவுக்கு அடிக்கடி வரும் ஆசிரியர் யார் ? அப்படி அவர் சொல்லிக்கொடுத்த திறமை என்ன ?


