நான் எனப்படும் நான் : 122
” Infinity is the Best Co Existence. Willing to Travel Along with it ? “



நம்முடன் பயணிப்பதில் மிக முதன்மையான ஒன்று … ” முடிவிலி ” ( Infinity ). முடிவிலி ஓர் வித்தியாசமான சக இருப்பு. ( Co Existence ). நம் கடைசி மூச்சு வரை நம்முடன் மௌனமாய் பயணிக்கும் அது, அனைத்தையும் கவனிக்கிறது. குறிப்பாக நாம் செய்யும், பிறர் செய்யும் அனைத்தையும் ! தனியாக இருப்பதாக நாம் நினைக்கும்போதெல்லாம் முடிவிலி நம்முடன் இருப்பதை நாம் மறந்தே போகிறோம்.
” IT WATCHES US ALL THE TIME. YES. ALL THE TIME “



ஒரு முறை இமயமலையில், காலை வேளையில் நீண்ட நடை ஒன்றை ஆரம்பித்தேன். பொதுவாகவே இமயமலை மனிதர்கள் சார் மலை அல்ல. அங்கே ஒரு நாளின் 200 Kms பயணத்தில் சுமார் 100 மனிதர்களை பார்த்தால் அது மிகப்பெரும் விடயம். அப்படியான ஒரு உலகத்தில், அதிகாலை 5 Kms அளவுக்கு நடக்கும்போது .. நான் மற்றும் எனக்குள் கேட்கும் மூச்சுக்காற்றின் சத்தம் .. இவை இரண்டிற்கும் ஏதாவது ஒரு சாட்சி உண்டா என்று எனக்குள் கேட்டால் ” இருப்பு ” மட்டுமே என்று என்னுள் பதில் தோன்றியது. இப்போது நான் இங்கே எழுதுவதையும் அது மட்டுமே படித்து புரிந்து கொண்டு சிரிக்கும். ” இருப்பினை” உடன் வைத்து இருப்பவர்கள் எதற்கும் கவலைப்படுவது இல்லை. எதற்காகவும் காத்திருப்பது இல்லை.
” Existence is not an illusion. Its a muted mate. “



சாலையில் நடக்கிறோம். படிக்கும் பையன் ஒருவன் பள்ளியில் இருந்து வந்த பின் ஒரு கடையில் வேலை பார்க்கிறான். அவனுக்கு தேவை எல்லாம் ஒரு 1000 ரூபாய் மட்டுமே. நம்மிடம் இருக்கிறது. ஆனாலும் கடந்து செல்கிறோம். இருப்பு கவனிக்கிறது. நமக்கு இருக்கும் வெறுப்பு காரணமாக நல்லது செய்யும் மனிதர்களை பற்றி தவறாக பேசுகிறோம் – தவறு என்று தெரிந்தும். இருப்பு கவனிக்கிறது. திட்டமிட்டு சிலவற்றை பெறுகிறோம். சிலவற்றை கிடைக்கவிடாமல் செய்கிறோம். இருப்பு கவனித்துக்கொண்டே இருக்கிறது. செய்ய வேண்டியவைகளை செய்யாமல் இருக்கிறோம். இருப்பு கவனிக்கிறது. செய்யக் கூடாதவைகளை செய்கிறோம் இருப்பு கவனிக்கிறது. ஆம். இருப்பு கவனித்துக்கொண்டே இருக்கிறது.
” We are never Alone. We Are being constantly Accompanied. Yes. Constantly. By Existence. “


