நான் எனப்படும் நான் : 121
” செய்ய வேண்டியவைகள் செய்ய முடிந்தவைகளாக மாறும்போது … காத்திருக்கும் செய்ய வேண்டியவைகளை நோக்கி மனம் நகர்கிறது ! “



Diet / Blood Reporting / Health / உடற்பயிற்சி – செய்ய வேண்டியது என்பதில் இருந்து – செய்ய முடிந்ததாக மாறி இருக்கிறது.
10K steps – ” அப்படியே “
புத்தகம் படித்தல் – ” அப்படியே “
புத்தகம் எழுதுதல் – ” அப்படியே “
புகைப்படம் – ” அப்படியே “
தீரா உலா – ” அப்படியே “
புதிய கற்றல் – ” அப்படியே “
திரைப்படம் பார்த்தல் / கற்றல் – ” அப்படியே “
இப்படி பல விடயங்கள். ஆனாலும் காத்திருக்கும் செய்ய வேண்டியவைகள் நிறைய இருக்கிறது. அவற்றையும் இப்போது கையில் எடுக்கிறேன். விரைவில் அவையும் செய்ய முடிந்தவைகளாக மாறும்.
” Have to – will Become – part of us – If we persist with what We have to do for Long time !. “



நேரம் தான் மனிதனின் பெரும் பலம். 24 மணி நேரம் எல்லாம் நாம் நமக்காக செய்தது. நேரம் ஒரு infinity. அது போல ஒரு வள்ளல் தன்மை கொண்டு மௌன யோகி இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. இல்லவே இல்லை !
அந்த நேரத்தை பயன்படுத்தினால் எதுவும் செய்ய இயலும். இல்லை எனில் ? நேரம் நம்மை வேறு யாரோ ஒருவருக்காக அல்லது ஒரு சிலருக்காக பயன்படுத்த துவங்கிவிடும். நினைவில் இருக்கட்டும்.
” An Eternal Force – Time stays Everlasting and Ever Loving. “


