நான் எனப்படும் நான் : 123
” The More Action on What are to Be Deleted, Makes More Action on What Is to be Done ! “



களை எடுத்தல் என்று ஒன்று உண்டு. தேவையானதிற்க்கு நடுவே தேவை இல்லாதது இருந்தால் அவற்றை சுத்தமாக வெளியே எடுத்தல் ! அப்படி எடுப்பதால் தேவையானவைகளுக்கு space நிறைய கிடைக்கும். தேவையானவை இன்னமுமே அழகாக வளரும். நிலைக்கும். செழிக்கும் !
வாழ்க்கையில் தேவை அற்றவைகளை அவ்வப்போது களை எடுத்தல் முக்கியம். என்னை பொறுத்தவரை களை எடுத்தலுக்கு முன் என் மனதிற்குள் சில கேள்விகள் எழும். மக்களுக்கு / சூழ்நிலைகளுக்கு என்று இரு விதமாக அவற்றை இங்கே அளிக்கிறேன். உதவியாக இருக்கக்கூடும்.
1. யார் இவர்கள் / என்ன இது ?
2. என்னுடன் எவ்வளவு காலமாக பயணிக்கிறார்கள் / எவ்வளவு நாளாக இப்படி ?
3. என்னுடைய கடின காலங்களில் / சூழ்நிலையில் இவர்களின் நிலை என்ன ? // இந்த சூழ்நிலையில் இது தேவையா தேவை இல்லையா ?
4. என் எதிர்கால நோக்கங்களில் இவர்களின் பங்கு என்ன ? / இந்த சூழல் இப்போது மட்டுமே இருக்கக்கூடியதா ? அல்லது நீண்ட கால சவாலாக அமையுமா ?
5. இவர்கள் இல்லாமல் வாழவே முடியாதா என்ன ? / இந்த சூழ்நிலை எதிர்கொள்ள முடியாத ஒன்றா ?
இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் போது அந்த மனிதர்கள் / அந்த சூழ்நிலை களையா ? அல்லது தேவையா ? என்று முடிவாகிவிடும்.
அதற்கு பின் ? Yes No தான் !
” The Moment may be a challenging one. But .. Once We fix Yes or No to that moment, then, Huge Moments are Waiting for Us. ! “



நிறைய நேரங்களில் மனிதர்கள் நம்மை புரிவதற்குள் நம்மை பற்றிய முடிவை எடுத்து விட்டு பேசி, செயல்பட்டு, பின்னே நம்மை பற்றி தெரிந்து வருத்தம் தெரிவிப்பார்கள். ஆனால் அதற்குள் நாம் களையை எடுத்திருப்போம் ! களை எடுக்கப்பட்ட மௌன நிலங்கள் தேவையானதை வளர்ப்பதில் மட்டுமே கவனம் கொள்ளும்.
” Needs will Never have a cordial relationship with Unwanted “



ஒரு யோகியிடம் சீடர் கேட்டார்.
” சிந்தனைகளை நெறிப்படுத்த என்ன செய்ய வேண்டும் ? “
யோகி சிரித்துக்கொண்டே சொன்னார்
” உள்ளே செல்வதில் தேவையானவைகளை மட்டுமே செலுத்து. தேவையானவை மட்டுமே சிந்தனைகளாக வெளியே வரும் ! “
” Our input decides the Quality of Outputs “



களை எடுக்கும் நாளாக இன்று அமையட்டும் – தேவையானவர்களுக்கு !


