நான் எனப்படும் நான் : 125
” Full Focus on Everyday Schedules and it’s Expected Outcomes, One day Will take us to An Incomparable State of Life ! “



அதிகாலை 04.00 மணிக்கு எழுதல். 05 மணிக்கு online ல் முதல் வகுப்பு. 08.00 மணிக்கு online ல் இரண்டாம் வகுப்பு. 09.30 மணி முதல் 07.00 மணி வரை Brainstorming Sessions For Business Development. 08.30 க்கு மீண்டும் online ல் மூன்றாம் வகுப்பு. இது Teen களுக்கானது. 09.30 மணியளவில் தான் ஓய்வு ! அல்லது ஓய்வை நோக்கிய மன அளவு தயார் படுத்தல். பின்பு படுத்தல் !
நாள் முழுக்க busy யாக இருப்பது எனக்கு முக்கியமான ஒன்று அல்ல. எதற்காக busy யாக இருக்கிறோம் ? என்பது தான் என் கேள்வி. அங்கே எனக்குள் எழும் சில கேள்விகளை இங்கே உங்களுக்கு பகிர்கிறேன். உதவலாம். உதவினால் எடுத்துக்கொள்ளுங்கள்.









அதிகாலை எழுவதால் பெரும் வெற்றி பெறலாம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.



அப்படி எனில் அதிகாலை எழக்கூடாதா ?
எழலாம். எழ வேண்டும். ஆனால் ” எதற்காக ” எழ வேண்டும் என்கிற கேள்வியும் அதற்கான Practical பதிலும் தான் … எனக்கு மிக முக்கியம். ( சமயத்தில் ஒரு வேலையும் இல்லை எனில் .. நல்ல தூக்கம் எனக்கான தீர்வு ! ஆனால் நிச்சயமாக எந்த வேலையும் இல்லையெனில் !! )



காலை 04.45 க்கு இந்த Write Up எழுதி முடிக்கப்பட்டு விட்டது. வகுப்பின் break ன் போது .. Share செய்யலாம் என்று வைத்திருந்தேன். இப்போது செய்கிறேன்.
உங்களின் பின்னூட்டங்களை பதியலாம். பின்னூட்டங்களில் கற்போம்.


