நான் எனப்படும் நான் : 126
” Challenges Either Arrived Automatically or Selected Consciously – Decides our Future ! “



ஒரு நிறுவனத்திற்காக பயிற்சி வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம். அடுத்த 15 நாட்கள் காலை முதல் நீள் இரவு வரை தொடர் வகுப்புகள் காத்திருக்கின்றன. அதிகாலை என்னுடைய online வகுப்புகள், கிடைக்கும் நேரங்களில் 10K, புத்தக வாசிப்பு, புத்தகம் எழுதுதல், புதிய கற்றலில் கவனம் … என்று ஓட்டம் மிக அதிகமாக ஆகப்போகும் நாட்கள் காத்திருக்கின்றன. ( fb /Whatsapp / Twitter இதெல்லாம் ஆங்காங்கே நேரம் கிடைக்கும் போது தான் ! 
). Tight Schedules உள்ள நாட்கள் தான் எனக்கு மிகப்பிடித்த நாட்கள். அங்கே தேவை அற்றவை வெளியேறி, தேவையானதில் மட்டுமே கவனம் இருப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு ! தேவையானவற்றில் கவனம் செலுத்துவதை விட ஒரு சிறந்த நாள் இருக்க முடியுமா என்ன ?


” When Important comes in, Less Important Goes out ! “



பொதுவாக இந்த மாதிரியான வகுப்புகளை நோக்கி நான் செல்லும்போது மனம் என்ன சொல்லும் என்று நினைக்கிறீர்கள் ?




இப்படி எல்லாமா நான் எனக்குள் கேட்டுக்கொள்வேன் என்றா நினைக்கிறீர்கள் ? இல்லவே இல்லை.




இந்தக் கேள்விகள் எனக்குள் இருக்கும் அறியாமையை அகற்றி அறியும் பகுதிக்கு என்னை இழுத்து வருவதில் தான் நிகழ்வின் பலம் காத்திருக்கிறது. அதே போல … நிறுவனத்தின் பலமும் அங்கே தான் காத்திருக்கிறேன்.
” Ignorance is Bliss. Because it brings light within ! “



இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பிக்க இருக்கும் இந்த கற்றல் பயணம் … இந்த May 05 வந்தால் 24 ஆம் வருடத்தை தொடுகிறது. 24 வருடங்களும் ” அறியாமையை ” அறியும் முயற்சி தான். ” உங்களுக்கு தெரியாததா ? ” என்று யாராவது சொன்னாலோ அல்லது ” எனக்கு தெரியும் ” என்று அவர்களை பற்றி அவர்களாகவே பேசிக்கொண்டாலோ … உள்ளும் புறமும் எனக்கு சிரிப்பே வரும்.
அறியாமை ஒரு முடிவிலி.
அறிதல் ஓர் நிகழ் முடிவு.
பயணிப்போம்.
” Be Vigilant to Identify The Ignorance within ! “


