நான் எனப்படும் நான் : 131
” Its not about The Years. Its about What we Learn and How we apply to Change Ourselves ! “



முதல் முதல் ஒரு பயிற்சி வகுப்பு என்பது Unofficial ஆக என் 15 வயதுகளில். என்னுடன் படித்த நட்பின் அப்பா அப்போது Aptech நிறுவனத்தினை என் சொந்த ஊரில் வைத்திருந்தார். ஒரு நாள் என் பள்ளி நட்பிடம் நான் இவ்வாறு சொன்னேன்.
” Aptech நிறுவனத்திற்கு படிக்க வருபவர்களுக்கு ஒரு வகுப்பு எடுக்க விரும்புகிறேன். அப்பாவிடம் பேச வேண்டும் “.
அவன் கேட்ட முதல் கேள்வி… ” நீயா ? “.
அவனின் அப்பாவை சந்தித்து எனக்கிருந்த விருப்பத்தை சொன்னேன். அவரும் கேட்ட முதல் கேள்வி … ” நீயா ? “
1. ” First … They raise suspicious looks on your skills “



முதல் முதலாக வகுப்பு எடுக்க போகிறேன். மனதிற்குள் கேள்விகள்.
முதல் கேள்வி…. “நம்மால் முடியுமா ?”.
இரண்டாவது கேள்வி … ” சரியாக வந்துவிடுமா ? ” மூன்றாம் கேள்வி …. ” மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்குமா ? “. என்ன நடந்தாலும் சரி .. நம்மிடம் இருக்கும் நல்லவற்றை கொடுக்க நாம் ஏன் பயப்பட வேண்டும் ? … இந்த ஒரு கேள்வி தான் தேவையான தன்னம்பிக்கையை கொடுத்தது.
வகுப்பு ஆரம்பித்தது. ஒரு சிறு பயிற்சி. அந்த பயிற்சியின் முடிவில் .. ஒவ்வொருவரும் தாங்கள் கற்றுக்கொண்டதை சொல்ல .. மனம் அந்த கேள்வியை திருப்பி வேறு விதமாக சொன்னது.
” நம்மிடம் இருக்கும் நல்லவற்றை கொடுத்தால் உலகம் நம்மை வரவேற்கும் “
2. ” Then .. they make note of our skills. “



வள்ளியம்மை. அவருக்கு வயது சுமார் 23 இருந்திருக்க கூடும். இவர் தான் எனக்கு முதன் முதலாக Feedback பின்னூட்டம் கொடுத்தவர். இன்னமுமே ஞாபகம் இருக்கிறது.
” உங்களுக்கு எப்படி இந்த வயதில் இப்படி தோன்றியது ? ” என்று தன் பின்னூட்டத்தை ஆரம்பித்தவர் … ” எளிமையாக, சிறு பயிற்சிகளுடன் எப்படி பெரும் விடயங்களை உங்களால் புரிய வைக்க முடிகிறது ? ” என்று கேள்விகளை கேட்டுக்கொண்டே வந்தவர் கடைசியாக சொன்னார்.
” பயிற்சி வகுப்புகளில் பெரும் எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது. நான் அமெரிக்க வாழ் தமிழ் பெண். இந்தியாவிற்கு நீங்கள் மிக தேவை “
இப்படியெல்லாம் அவர்கள் சொன்னது இன்று வரை நினைவில் இருந்தாலும் … அப்போது தோன்றியது ஒன்று மட்டுமே…
” நல்லதை கொடுத்தால் உலகம் வரவேற்கும் “
3. ” Then .. They Wonder at you “



அங்கே இருந்து அடுத்த 06 வருடங்கள் படிப்பில். உடன் எப்போதும் பயணித்த புத்தகங்கள். அதன் பின்பு ஆரம்பித்த official பயிற்சி வகுப்புகளின் மூலம் கற்றல் / கற்க உதவுதலுக்கு .. இன்று 25 வருட வயது. ஆம். கால் நூற்றாண்டு. நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. இந்தியா முழுக்க பயணம். Kashmir மற்றும் Bihar ல் மட்டும் தான் இன்னும் வகுப்புகள் எடுக்கவில்லை. மற்றபடி இந்தியா முழுக்க கற்றல்…. கற்க உதவுதல்…. தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தொடரும்.
4. ” Then .. the Certify you. “



என்னால் முடிந்த அளவு நல்வழிப்பாதை நோக்கி மனங்களை திருப்ப முயற்சித்து இருக்கிறேன். பலவற்றில் மனம் நிறையும் முடிவுகள். பலவற்றில் மனம் சோர்ந்து போகும் நிகழ்வுகள். அனைத்தையும் சேர்த்து மனிதர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. கற்பவர்கள்.
2.கற்றுவிட்டதாக நினைப்பவர்கள்.
3. இன்னமும் கற்க வேண்டி இருக்கிறது – என எண்ணுபவர்கள்.
நான் மூன்றாம் வகை.
5. ” Then .. A new set of people will come and question You. That’s where Your Actual Smile Begins “








