படமும் கற்றலும் : 007
#படமும்கற்றலும் ; 007
” கடக்கும் மனிதர்களை பெரும் பிரம்மாண்டமாக பார்ப்பது முதிர்ச்சி ! யாருக்கு தெரியும் – எதிர்காலத்தில் அவர்கள் பெரும் ஆளுமைகளாக மாறக்கூடும் ! “



அந்த நால்வரும் இந்த புகைப்படத்தை எடுத்துக்கொள்ளும்போது கடந்த ஒரு மனிதன் அவர்களை பற்றி என்ன நினைத்திருக்ககூடும் ?





இப்படியெல்லாம் தோன்றியிருக்ககூடும் – அதில் நிற்பதில் இருவர் – ஒருவர் இன்றைய SPB / மற்றொருவர் இன்றைய இளையராஜா என்று தெரியாத வரை ! சரி .. ஒரு உதாரணத்திற்கு …. இந்த புகைப்படத்தை அந்த காலத்தில் எடுக்கும்போது நேரில் பார்த்தவர்கள் அதே வரிகளுக்கு … இப்போது என்ன சொல்வார்கள் ?




இதுதான் உலகம். சாதாரண மனிதன் சாதிக்கும் வரை அவனை ” Just எவனோ எவளோ ” பார்வையை கொடுக்குக்கொண்டே இருக்கும். சாதித்த உடனேயே ” எனக்கு முன்னமே தெரியும் ” என்று கொஞ்ச ஆரம்பிக்கும். உரிமை கொள்ளும். பழகும். திடீர் நட்பு பாராட்டும்.



முதிர்ச்சி என்றால் என்ன ?
இந்த கேள்விக்கு இந்த புகைப்படம் எனக்குள் அளித்த மின்வெட்டு தான் இந்த எழுத்தின் கண்ணுக்கு தெரியாத விதையின் வேர் !
முதிர்ச்சி என்பது கடக்கும் ஒவ்வொரு மனிதனையும் ” மிகப்பெரும் மாற்றத்தை நாளை ஏற்படுத்தபோகும் ” மனிதனாக இருக்கக்கூடும் என்று கவனிப்பது. அனைவரையும் அப்படி பார்க்க முடியுமா ? என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழக்கூடும். அங்கே ஒரு Disclaimer – எண்ணங்களில், நோக்கத்தில், செயலில் … சரியில்லை என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே அந்த மனிதர்களை நாம் நம் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி வைத்து நம் வேலையை பார்க்கலாம். மற்றவர்கள் ? யாருக்கு தெரியும் ? நாளைய உலகின் முன்னேற்றத்தை வடிவமைக்கும் பெரும் ஆளுமையாக அவர்கள் இருக்கக்கூடும் !



சரி. இளையராஜா அவர்களுக்கும் SPB அவர்களுக்கும் .. இந்த புகைப்படம் எடுக்கும்போது என்ன தோன்றியிருக்ககூடும் ? பெரும் ஆளுமைகளாக நாம் மாறுவோம் என்றா ? அப்படி ஒரு நம்பிக்கை இருந்திருக்கலாம். ஆனால் அப்படி ஆவோம் என்று நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுதான் வாழ்க்கையின் புதிர் கவிதை.
” புகைப்படத்தில் இருப்பவர்களுக்கும், புகைப்படம் எடுத்தவர்களுக்கும், புகைப்படம் எடுக்கும்போது கடந்தவர்களுக்கும் … யாருக்கும் நாம் /இவர்கள் என்னவாக ஆகப்போகிறோம் – என்று தெரிய வாய்ப்பேயில்லை “
அவ்வளவுதான் நம் அறிவுஜீவித்தனம். இதை வைத்துக்கொண்டு தான் ” இவர் இப்படி அவர் அப்படி இவள் இப்படி அவள் அப்படி ” என்று பறை சாற்றுகிறோம். இப்போது உங்களுக்குள் ஒரு கேள்வி எழும் ! ” அட .. ஆமாம் ? “
யாரும் என்னவாக மாறுவார்கள் என்று Predict செய்யமுடியாத உலகில் கடக்கும் மனிதர்களை பெரும் பிரம்மாண்டமாக பார்ப்பதில் ஒன்று நிச்சயம். ஆம். நாம் … மிக எளிமையாகவே இருப்போம் – நம் எண்ணங்களில் !


