படமும் கற்றலும் : 009
#படமும்கற்றலும் ; 009
” பழையன என்று ஒரு நாள் ஆகும் வரை, இருப்பவைகளின் மதிப்பு தெரிவதில்லை ! “



Scooter என்று அதை நாம் அழைக்கும்போதே நம் மனம் சிரிக்க ஆரம்பித்து விடும்.இப்போது வழக்கமாகிப் போன Stylish look ல் எல்லாம் அது இருக்காது. உலக bike / scooter சந்தையில் அது கிட்டத்தட்ட இந்திய முகம் ! பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தின் கனவு முகமும் அதுவே !
அந்த Scooter எனக்கு பார்க்கும்போது அவ்வளவாக பிடிக்காமல் இருந்தது. KB 100 / Yamaha தான் பெரும்பான்மை இளைஞர்களை இழுத்து கொண்டிருந்த காலகட்டத்தில் … Scooter தன் தனித்தன்மையை நிறுத்திக்கொண்டு இருந்தாலும் எனக்கு அதன் மேல் ஈர்ப்பு வரவில்லை – ஒரு முறை அதை ஓட்டும் வரை !
அந்த இரு Seat களிலும் அதன் design களிலும் அதன் இருக்கும் விதத்திலும் … என்ன மாயம் செய்தார்கள் என்று தெரியாது … ஆனால் கிட்டத்தட்ட பறப்பது போலவே இருக்கும். பள்ளம் மேட்டில் ஏறி இறங்கும்போது இடைப்பகுதியில் வலி உணர்வு இருக்காது. அப்படி ஒரு வாகனம் ஆச்சர்யம் எனில் அதை ஏன் Bajaj நிறுவனம் நிறுத்தினார்கள் என்பது எனக்கு பெரும் ஆச்சர்யம் ! ( Ambassador க்கும் இதே எண்ணம் எனக்குள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும் ! )



பாண்டிசேரியில் இருந்து சென்னை நோக்கி அதில் பயணம் செய்தது இன்னமும் நினைவில். கடலின் உப்புக்காற்றும் … இடது பக்க வலது பக்க பெரு வெளியும் இந்த பயணத்தில் மறக்க முடியாதவை !
இந்த Scooter ல் இன்னொரு அழகான முரணையும் காணலாம். கணவன் நேர் பார்வையாக சாலையை பார்த்து ஓட்டிக்கொண்டு இருக்க .. மனைவி Horizontal பார்வையில் அமர்ந்து இருப்பாள். வாழ்க்கை முரணை அழகாக சொல்லும் visual அது. இப்போது இருப்பது போல ஓட்டுபவனின் கிட்டத்தட்ட முதுகின் மேலே சவாரி செய்யும் முந்திரிக்கொட்டை தனம் அப்போது பார்க்க முடியாது. இதே போல் அழகாக முன்னே நின்று கொண்டு பயணிக்கும் ஒரு குழந்தையும், பின்னே மனைவியின் மடியில் அமர்ந்து பயணிக்கும் இன்னொரு குழந்தையுமாக …ஒரு திறந்த வெளி அதிசய Car அது !



இப்போதும் எங்கேயாவது அதை பார்த்தால் அதை சுற்றி யாரோ நான்கு பேர் அதை பற்றி பேசிக்கொண்டே கேள்வி கேட்டுக்கொண்டே வியந்து கொண்டே இருப்பதை காணலாம்.
ஆம். இருக்கும் போது Just இருந்து விட்டு .. இல்லாத போது அதிசயமாக நாம் பார்ப்பது அவை போன்ற வாகனங்கள் மட்டும் அல்ல. நம் வீட்டு மனிதர்களையும் தான் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லி கொடுக்கும் கடந்த கால பாடம் அது !



இந்த வாகனம் பற்றிய உங்களின் நினைவுகளை பகிரலாம். பகிர்வோமா ?


