நான் எனப்படும் நான் : 133
” Be careful about What you want. Because You may get it ! “



” இந்த வழி தவறு. இப்போது அனைத்தும்
இனிமையாக
இருக்கும். ஆனால் சில காலம் கழித்து இது பெரும் தவறென்று புரியும். ” என்று நான் சொன்னபோது ” எல்லாம் எனக்கு தெரியும் ” என்று சொன்ன அந்த நட்பை சிரித்து கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தேன். நமக்குள் தெரியும் காலத்தின் எதிர்கால படம் … ஏன் இவர்களுக்கு தெரிவதில்லை என்ற அந்த கேள்விக்கு வந்த பதில் தான் எனக்கான ” அந்த சிரிப்பு “



வாழ்க்கைக்கு வரப்புகள் உண்டு. வரப்புக்குள் பயணம் செய்யும் மனிதர்கள் தங்கள் இலக்குகளை அடைவது கண்ணில் அழகாக தெரியும். வரப்புகளை உடைத்து, வரப்புகளை தாண்டி, வரப்புகளை மாற்றுவது என்று முடிவெடுக்கும் மனிதர்களின் எண்ணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் வாழ்க்கை அந்த மனிதர்களுக்காக வாழ்க்கை தன் வரப்புகளை மாற்றிக்கொள்கிறது. ஆனால் .. எண்ணங்கள் சரி இல்லை எனில் வாழ்க்கை வரப்புகளாலேயே, வரப்புகளுக்குள் வைத்து, Unexpected அறைகளால் வளைத்து வளைத்து அடிக்கும். அங்கே தங்களை தொலைத்த மனிதர்கள் மிக மிக அதிகம்.



சில நேரங்களில் நாம் மிக மிக busy யாக இருப்போம். நமக்கான வேலைகளே நமக்கான நேரத்தை உண்ண காத்திருக்கும். அப்போது தான் சில மனிதர்கள் நம்மிடம் வருவார்கள். அவர்கள் வரும்போதே ” உயிர் போவது ” போன்ற சூழ்நிலைகளுடன் வருவார்கள். நாமும் நம் வேலைகளை விட்டுவிட்டு … அவர்களுக்கு உதவுவோம். அவர்கள் வேலை முடிந்தவுடன் ஒரு Update ம் இருக்காது. எங்கே இவர்கள் என்கிற அளவிற்கு காணாமல் போவார்கள். பிறகு மீண்டும் வருவார்கள். பாடம் எடுக்காத நம்மில் சிலர் மீண்டும் உதவ செல்வோம் !
இதை கவனித்த பின் நான் சில முடிவுகளை எனக்குள் எடுத்துக்கொண்டேன்.


இவை அனைத்தையும் மீறியும் இப்போது ஒன்று செய்கிறேன். ஒரு Mail ல் அல்லது Whatsapp ல் அல்லது முகநூலில் … இது தவறு / சரி என்பதை சொல்லிவிட்டு என் பயணம் தொடர்கிறேன். எதிர்காலத்தில் அந்த எழுத்து ஆவண சாட்சியமாக மட்டும் அல்ல …இப்படியான மனிதர்கள் மீண்டும் எம்மை நெருங்க முடியா கேடயமாகவும் இருக்கிறது.


