படமும் கற்றலும் : 012
#படமும்கற்றலும் ; 012
” மரம் செடி கொடிகள் தான் உண்மையான இயற்கையின் கடவுள்கள். மற்றவை ?. மனிதனின் கற்பனைத்திறன் ! “



Twitter ல் அந்த புகைப்படம் என்னை சட்டென நிறுத்தியது. தான் நட்ட விதை ஒன்று 100 வயதை அடைய, அதை விட கொஞ்சம் அதிக வயதில் தன் மரத்துடன் அந்தப் பெண்மணி எடுத்துக்கொண்ட மரfi ! ஆம் உண்மையான Selfi ! தான் நிற்க Walker பயன்படுத்தும் அந்த பெண்மணிக்கு அருகில் எந்த துணையும் இல்லாமல் வேரில் 100 வருடமாய் நிற்கிறது … என்பதில் தான் அதன் ” கடவுள்தனம் ” வெளிவருகிறது ! உண்மையில் நமது பூஜை அறையில் முதலில் இருக்க வேண்டிய படம் .. மரம் தான் ! பிறகே மீதி கடவுள்களுக்கு அங்கே இடம் !



எவ்வளவோ சாதித்து, சம்பாதித்து, உதவி, படித்து, உணர்ந்து, பகிர்ந்து … என்ன செய்திருந்தாலும் … அடர்ந்த காடு ஒன்றிற்குள் செல்லும்போது நாம் ஒன்றும் அற்றதாக மாறிப்போகிறோமே … அங்கே தான் வருகிறது மரங்களின் பிரம்மாண்டம் ! எந்த சத்தமும் இல்லாது நிற்கும் தலைமுறை மரங்களை காணும்போது மனிதன் போடும் ஆட்டத்தை கவனித்தால் யாரோ சொன்ன ” மனிதன் ஒரு சல்லிப்பயல் ” உண்மை என்று புரியும். அத்தனை பெரிய காட்டை கட்டி விட்ட, எந்த புது மனை புகு விழாவும் நடத்தாமல், மனிதர்களிடம் தான் ” வளர்ந்து கொண்டு இருக்கிறேன் பார் ” என்றும் சொல்லாமல் மௌனமாக நிற்கும் அவை தான் பேரதிசயம் !



இந்தூரில் ஒரு கல்லூரியில் ஆரம்பித்தது என்னுடைய செடி நடும் முதல் நிகழ்வு. ஒரு பயிற்சி வகுப்புக்கு பின், அந்த கல்லூரியின் நிறுவனர் என்னை அழைத்து ” செடி ஒன்றை நீங்கள் நடுகிறீர்கள் ” என்று சொன்னபோது … ஒரு Conceive ஆன, பிரசவிக்க போகும் உணர்வு போல .. இனம்புரியாத உணர்வு அது ! வெட்டி வைத்த பள்ளத்தில் செடியை நட்டுவிட்டு எழுந்த போது .. என்னவோ ஒன்றை உலகத்திற்கு கொடுத்த நிறைவு. நட்டதற்கே நமக்கு நிறைவு ! ஆனால் .. தலைமுறை தலைமுறையாய் வாழப்போகும் அந்த செடி மௌனமாக அங்கே தான் வளர வேண்டிய வேலையை ஆரம்பித்து இருந்தது. இவ்வளவு தான் நாம் ! சிறு விஷயத்திற்கும் ஏதோ சாதித்ததை போல நிறைவு. பெரும் விஷயத்தில் கூட மௌனமாய் நிற்கும் மரம். யார் பெரியவர் இதில் ? இன்னும் சொல்லப்போனால் எது கடவுளின் தன்மை இங்கே ?



700 கோடி மனிதர்களால் நிரம்பியதாம் இந்த பூமி ! ஆளுக்கு 10 மரங்கள் ? ஆளுக்கு 05 ? அட .. வேண்டாம் .. ஆளுக்கு ஒன்று ? அப்படி என்றால் 700 கோடி மரங்கள். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒன்று எனில் 700 × 12 கோடி மரங்கள் ! என்ன பெரும் எண்ணிக்கை என்று பெருமை வருகிறதா ? அவ்வளவு தான் நாம் ! இதைவிட பெரும் அளவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மரங்கள் மௌனமாய் நாம் அவற்றிற்கு செய்யும் துரோகங்களை கவனித்து கொண்டே ஆனாலும் மன்னித்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் பொறுமையும் உடையும் போது .. நிலம் அதிர்கிறது. ஆறுகள் பொங்கி வழிகின்றன. கடல் பொங்குகிறது. ஆம். இயற்கைக்கும் பொறுமைக்கு எல்லை உண்டு.



அந்த ஒரே ஒரு செடியை இன்று நடுவோமா ? என்னது ? நாளை நல்ல நாளா ? ( உங்களை எல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் .. என்று விவேக் சொல்வது மனதில் ….

).



செடி நடும் நாட்கள், மரம் வளர்க்கும் நாட்கள் அனைத்தும் நல்ல நாட்களே !
செடி நடும் புகைப்படம் ஒன்றை இங்கே Post செய்வோமா ? ( பழைய புகைப்படம் அல்ல. இன்று நடும் புகைப்படம் ஒன்று ! )


