படமும் கற்றலும் : 014
#படமும்கற்றலும் ; 014
” பெருவெளி தான் இறை தன்மை. மற்றவை அனைத்தும் Just கண்டுபிடிப்புகள் “



அந்த புகைப்படம் பார்த்ததும் மனம் சட்டென அங்கேயே இலயித்தது. என்ன அழகான புகைப்படம் ! பெருவெளி, கடல், நிலா, நீலம், வெளிச்ச சிதறல்கள் … வாவ். அதெல்லாம் சரி .. அதென்ன அங்கே குறுக்கே உயர உயரமாக பிம்பங்கள் ? அந்த பிம்பங்கள் எதையோ தாங்கி பிடிக்கின்றனவே ? ஓ .. அவை மனித பிம்பங்களா ? அவற்றின் கையில் இருப்பவை CellPhones களா ? அடடா .. ஏன் இந்த குறுக்கீடுகள் ?



இமயமலையில் ஒருமுறை பயணித்து கொண்டிருக்கையில் ஒரு பெரு வெளியை கவனிக்க முடிந்தது. சட்டென நாம் அநாதையாகும் பொழுது அது ! I am just a Fleshy Negligible ! என்று நமக்குள்ளே தோன்றும்.
அப்படி ஒரு அழகான பெரு வெளியை ரசித்துகொண்டிருக்கும் போது .. ஒரு Tourist குழு ( Travel குழு அல்ல ! ) அந்த இடத்தை கடந்தது. அவர்களின் van நின்று அதில் இருந்து சட்டென மனித கூட்டம் ஓடி வந்தது. சில நொடிகள் அந்த பெருவெளியை பார்த்துவிட்டு .. வேக வேகமாய் Selfi எடுத்து Check செய்தது. அங்கே இருந்தே நட்புக்களுக்கு குழுக்களுக்கு அனுப்பி அவர்களை Video call ல் அழைத்து காண்பித்தது. சிரித்தார்கள். வியந்தார்கள். பேசினார்கள். சிலர் “குழந்தைக்கு Fees ஏன் நேற்று கட்டவில்லை ? ” என்று கோபமாக கேட்டார்கள். குழுவாக நின்று pic எடுத்தார்கள். ( சார் .. எங்களை ஒரு Pic எடுக்கறீங்களா ? ). Thanks கூட சொல்லாமல் வேக வேகமாக Van நோக்கி மீண்டும் ஓடியது. சில நொடிகளில் Van அந்த இடத்தை விட்டு கிளம்பியது. மறைந்தது. அவ்வளவு தான் அவர்களின் பெருவெளி தரிசனம். அவர்கள் மட்டும் அல்ல. நம்மில் பலரும் அப்படித்தான் !
” அந்த இடத்தை Photo எடுத்துட்டேன் .. ” என்பதில் இருக்கும் பெருமிதத்திற்கு இன்னொரு பார்வையும் உண்டு. அந்த இடத்தை மீண்டும் மீண்டும் புகைப்படத்தில் பார்த்துக்கொள்ளலாம் ! அதாவது “அந்த காட்சி இனி என்னிடம் Frozen ஆக இருக்கிறது – போதும் “என்கிற மனநிலை ! மனிதன் அப்படித்தான். அவனுக்கு அவளுக்கு அனைத்தும் அவன் அவள் control ல் இருக்க வேண்டும்.



பெருவெளி போன்ற அதிசய காட்சிகளுடன் ஏன் மனிதனுக்கு தன்னை இணைத்து கொள்ளும் மனநிலை வருகிறது ? காரணங்கள் மிக எளிது.
1. எனக்கு இந்த இடம் தெரியும். நான் அங்கே சென்றிருக்கிறேன்.
2. இந்த புகைப்படத்தில் நானும் இருக்கிறேன்
3. இந்தக் காட்சி என் Cameraவில் இருக்கிறது. என்னுடன் இது எப்போதும் இருக்கும்.
அதாவது மனிதனுக்கு …. ” தான் ” அங்கே இருந்தோம் என்பது முக்கியம். ” அது அங்கே இருந்தது ” என்றால் நம்மை நம்ப மாட்டார்கள் என்கிற அவ நம்பிக்கை அவனுக்கு அவளுக்கு. தாஜ்மஹால் முன் நாம் புகைப்படம் எடுத்து வீட்டில் கொண்டு வந்து வைப்பது இந்த மனநிலையில் தான் ! ( ஆரம்ப காலங்களில் நானும் இந்த தவறை செய்திருக்கிறேன். இப்போதெல்லாம் .. ” அது அங்கே இருந்தது ” மனநிலை தான். ) அப்படி என்றால் புகைப்படம் எடுக்க கூடாதா ? இல்லை. நாம் அதை பேசவில்லை. நாம் இங்கே வேறு ஒன்று பேசுகிறோம். நாம் பேசுவது … ” எதிலும் நம்மை இணைத்து கொள்ளும் ” மனநிலை பற்றி ! ஏன் ” அதை ” ” அதுவாக ” பார்த்துவிட்டு நம்மால் வர முடிவதில்லை என்பதை பற்றி !



இமயமலையில் நான் எடுத்த புகைப்படங்களை விட ….எடுக்காத ” அது அங்கே இருந்தது “காட்சிகள் தான் அதிகம். அவை இன்னமும் என் மனதில் ஊறிக்கொண்டே இருக்கின்றன. அவற்றை நான் யாருக்கும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அங்கே நான் இருந்தேன் என்று யாருக்கும் நான் நிரூபிக்க வேண்டியதும் இல்லை. இயற்கைக்கும் எனக்குமான தொப்புள் கொடி பிடிப்பு அது. அந்த பிடிப்புக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதன் இன்னொரு பக்கமான எனக்கும் அதனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை !



அடுத்த முறை இயற்கையின் பெரும் காட்சிகளை கவனிக்கும்போது … புகைப்படம் எடுத்துக்கொள்வது இருக்கட்டும். அதற்கு முன் … முதலில் .. அந்த காட்சியை சிறிது நேரம் முழுமையாக, உணர்வாக, இயற்கையின் தொப்புள் கொடி பிடிப்பாக, “அதை அது ” வாக … ரசித்துவிட்டு .. பின்.. நம் Camera வை எடுத்து .. நம்மை இணைத்துக்கொள்வோமா ?
இயற்கைக்கு நாம் கொடுக்கும் பெரும் மரியாதை இது !


