படமும் கற்றலும் : 015
#படமும்கற்றலும் ; 015
” சாதனையாளர்களிடம் இருக்கும் நம் எதிர்பார்ப்புக்கு எல்லையே இல்லை. அப்போது கேட்கப்படும் கேள்விகள்தான் இந்த உலகின் உண்மையான அநீதி ! “



சமீபத்தில் நடந்த French Open Title ஐ Federerம், Serena வும், ஏதோ காரணங்களால் வெல்லவில்லை. அங்கே ஆரம்பிக்கிறது இந்த எழுத்தின் வேர்.
ஒரு Champion ஒருமுறை வென்று விடுகிறார். மக்கள் கூட்டம் அவரை அவளை வியப்பாக பார்க்கிறது. இரண்டாம் முறை வெற்றி ? யார் இவர் / யார் இவள் என்று கேட்கிறது. மூன்றாம் முறை ? நான்காம் முறை ? பல முறைகள் ? இப்போது மக்கள் கூட்டம் தன் நிலையை மாற்றிக்கொள்கிறது. ” அவன் / அவள் ” வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று முடிவு செய்கிறது. வெற்றி பெற்றால் திறமையானவர். இல்லை என்றால் .. திறமை குறைந்து விட்டது அல்லது Hyped திறமை என்று நாக்கில் விஷம் வைத்து பேசுகிறது. கையில் விஷம் தடவி எழுதுகிறது. இதை ” எதிர்பார்ப்பின் உச்சபட்ச அநீதி ” என்று அழைக்கலாம். வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க அவன் அவள் ஒன்றும் Machine அல்ல – அவனும் அவளும் ஒரு மனித உணர்வுக் குழுமம் ! அவர்களிடமும் ஏற்ற இறக்கங்கள் உண்டு.



Roger Federer – வயது 39. 20 Grand Slam பட்டங்கள். 25 வருட tennis வாழ்க்கை. ஒரு மனைவி. நான்கு குழந்தைகள். உயரிய விருதுகள். Discipline ன் அடையாளம். திறமைக்கு அதீத உயரம். இவ்வளவும் மக்கள் கூட்டத்திற்கு போதவில்லை. ” இப்போதெல்லாம் சரியா விளையாடறது இல்லை ” என்று Coke சாப்பிட்டுக்கொண்டு, கால் நீட்டி, Fitness இல்லாத ஒன்று tv பார்த்துக்கொண்டு சொல்கிறது – இரக்கமே இல்லாமல். ஆம். 35 வயதில் Fitness ஐ தொலைத்து நிற்கும் ஒன்று 39 வயதிலும் அடுத்த GrandSlam வெல்ல துடிக்கும் நான்கு குழந்தைகளின் அப்பாவை கேள்வி கேட்கிறது. கணிக்கிறது. Stamp செய்கிறது. இதுதான் புத்தியின்மையின் முதல் அடையாளம் !
Serena ஒரு அதிசய ஆளுமை. திருமணமானவுடன் Tennis க்கு Bye சொல்லும் உலகில் ஒரு குழந்தைக்கு தாயான பின்னும் விளையாடும் அதிசயம். 25 வருட tennis வாழ்க்கை. 23 Grand Slam வெற்றிகள். பெண்களின் திறமைக்கு இன்னொரு முன்மாதிரி ! ஆனாலும் மக்கள் கூட்டம் அவரை கணிக்கிறது. ” Marriage ஆயிடுச்சி இல்ல .. முடியாது ! ” என்று உச் கொட்டுகிறது ! ” பேசாம Retire ஆயிடலாம் ” என்று சிரிக்கிறது. No 01 Position ஐ 300 plus வாரங்கள் வைத்திருந்த பெண் ஆளுமை அவர் ! அவருக்கும் அதே ” எதிர்பார்ப்பின் உச்சபட்ச அநீதி ” தான் !



அப்படி என்றால் கேள்வியே கேட்ககூடாதா ? ஏன் கேட்க கூடாது ? நன்றாகவே கேட்கலாம். எப்படி கேட்கலாம் என்று இங்கே கவனிப்போமா ?






இதுதான் கேள்விகள். இப்படித்தான் கேட்கப்பட்ட வேண்டும்.
என்ன உள்ளே ஏதோ செய்கிறதா ? Guilt feel வருகிறதா ? வலிக்கிறதா ?
ஆம். அப்படித்தான் வரும். அதனால் தான் நாம் உள்ளே கேட்பதில்லை. வெளியே கேட்கிறோம். யார் யாரையோ கேட்கிறோம். குறிப்பாக யாரை கொண்டாட வேண்டுமோ அவரையே அவளையே கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.



வெளியே கேள்வி கேட்பதால் உள்ளே Escape ஆகும் மனித கூட்டங்கள் தங்களது செயலுக்கு வைக்கும் பெயர் என்ன தெரியுமா ? Criticism ! எங்கோ படித்த ஒரு வரி இப்போது ஞாபகத்தில்.
” யார் வேண்டுமானாலும் Criticize செய்யலாம். ஆனால் ஒரு சிலர் மட்டுமே வாழ்ந்து காட்டுகிறார்கள் “
நாம் யார் ? அநீதியான கேள்விகளை திறமையான அவனை அவளை பார்த்து எழுப்பிக்கொண்டே இருக்கும் மனித கூட்டமா ?. அல்லது வாழ்ந்து காட்ட தனக்குள் கேள்வி எழுப்பி கொள்பவரா ?
நாம் யோசிக்க வேண்டிய நேரம் இது !


