படமும் கற்றலும் : 020
” எந்த புதிய தொழில்நுட்பமும், பயன்படுத்தப்படும் வகையில் தான், வாய்ப்பாகவோ அல்லது கெடுதலாகவோ மாறுகிறது “
நேற்று Clubhouse ல் Joe அவர்களை ஒலியால் சந்தித்தேன். யார் இந்த Joe ? அமெரிக்க காலணி நிறுவனங்களில் முதல் மூன்று இடங்களில் மற்றும் மக்களின் மனதில் ( குறிப்பாக விளையாட்டு வீரர்கள் / உடற்பயிற்சி ஆர்வலர்கள் ) தனக்கென ஒரு இடத்தில் அமர்ந்து இருக்கும் Reebok நிறுவனத்தின் Founders களில் ஒருவர் தான் Joe. அவரும் அவருடைய Brother Jeff ம் இணைந்து ஆரம்பித்த இந்த நிறுவனத்தின் வளர்ச்சி என்பது இன்று நமது நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் குக்கிராமத்தில் கூட யாரோ ஒருவர் Reebok காலணி அணிவதில் இருக்கிறது !

Clubhouse பற்றி முதன்முதலில் நான் கேள்விப்பட்டபோது கொஞ்சம் வியப்பாக இருந்தது. நவீன Radio அல்லது ” கேலொலி முகநூல் ” என்று தான் நான் relate செய்தேன். Radio என்னுடைய சிறிய வயது காலகட்டத்தில் நான் உபயோகித்த ஒன்று. அப்படியான ஒரு பயன்பாடு என்று நினைத்தாலும் அதில் இருக்கும் ஒரு வித்தியாசம் என்னை ஆச்சர்யப்பட வைத்தது. ஆம். Radio வின் நிகழ்ச்சிகளை நாம் கேட்கலாம். Clubhouse நிகழ்வில் நாம் பங்கேற்கலாம். அதாவது மனதில் தோன்றியவற்றை அந்த நிகழ்வு சார் மனிதர்களிடம் கேட்க முடியும். எவ்வளவு பெரிய வாய்ப்பு !
Jeff இடம் கேள்வி கேட்க என் முறையை பதிவு செய்துவிட்டு காத்திருந்தால் .. ஆச்சர்யமாக என் முறையும் வந்தது. ( பொதுவாக இந்த மாதிரி நிகழ்வுகளில் நம் முறை கிடைப்பதே பெரும் ஆச்சர்யம் தான் ! ). உலகப்புகழ் பெற்ற Reebok நிறுவனரிடம் பேசப்போகிறேன் என்பது எனக்கு ஒரு பயிற்சியாளராக பெரும் வரம். Hi Jay .. என்று அவர் ஆரம்பித்த போது நிச்சயமாகவே வியப்பு தான் எனக்கு. பெரும் மனிதர்கள் எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள் !
” வியாபார ஆளுமைகள் ஒரு கட்டம் வரை வேகமாக செயல்படுகிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்த ஒரு உயரத்தை அடைந்த பின், அவர்களுக்கு கிடைக்கும் Comfort Zone ல் அவர்கள் தொய்வடைந்து, வேகம் தணிந்து போகிறார்கள். நீங்களும் கூட அந்த காலங்களை கடந்து வந்திருப்பீர்கள். அந்த காலகட்டத்தில் அவர்களின் மனதிற்குள் இருக்க வேண்டிய ஒரு வரி என்று உங்களின் அனுபவத்தில் எதை சொல்வீர்கள் ? “
என் கேள்விக்கு முதல் பதிலாக அவர் சொன்ன விஷயமே எனக்கு ஆச்சர்யம் தான்.
” இப்படி ஒரு ஆழமான கேள்விக்கு ஒரே வரியில் தான் பதில் வேண்டுமா ? ” என்று சிரித்தார்.
” மன்னிக்கவும். நேரம் இருப்பின் விரிவான பதில் கொடுக்கவும் ” என்று தாழ்மையாக என் கேள்வியை மீண்டும் முன் வைத்தேன்.
” உண்மை தான். ஒரு உயரம் வந்த பின் அப்படியான ஒரு சோர்வு வருவது உண்மைதான். ஆனால் .. மக்களை, குறிப்பாக, நல்ல மக்கள் கொண்ட குழுவை தன்னிடம் வைத்திருப்பவர்களுக்கு சோர்வே வருவது இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் .. அந்த உயரமான இடம் நமக்கானது இல்லை. அது பிறரின் வாழ்வு சார்ந்த இடமாக மாறிப்போகிறது. நம்மை சுற்றி நல்ல மனிதர்களை கொண்ட குழுக்களை வைத்துக்கொண்டால் … சோர்வுக்கு வாய்ப்பில்லை. அடுத்த உயரம் மீண்டும் மீண்டும் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் “
என்ன ஒரு பதில் ! அந்த பதிலில் பணம் இல்லை. பெருமை இல்லை. வியாபார இலக்கு இல்லை. வீடு, car, குடும்பம் என்கிற தனி மனித வரைமுறைகள் இல்லை. ஒரே ஒரு பொதுவரை பதில் அது. ஆம். மக்கள் தான் பதில். நன்மக்களை கொண்ட குழுக்களை குழுவை அருகே வைத்திருப்போர்க்கு அடுத்த உயரம் மீண்டும் மீண்டும் கண்ணில் படும். எப்படியான ஒரு பார்வை ! ?
சில நேரங்களில் இயற்கை எனக்கு சரியான செய்தியை சரியான நேரத்தில் சரியான மனிதர்களின் மூலம் சொல்லிவிடும். நேற்று அது Joe மூலமாக நடந்ததில் பெரும் நிறைவும் மகிழ்வும் !





