படமும் கற்றலும் : 022
#படமும்கற்றலும் ; 022
” அந்த மனிதத்தை தான் தொலைத்து விட்டு பட்டங்கள் வாங்குகிறோம். பணம் சம்பாதிக்கிறோம். வீடு கட்டிக்கொள்கிறோம். வாகனம் வாங்குகிறோம். அசையும் அசையா சொத்து மட்டுமே உலகம் என்று நம்ப ஆரம்பிக்கிறோம். அருகில் இருப்பவர்கள் மறந்து போகிறார்கள். அங்கே மனிதமும் மரித்து போகிறது “



Twitter ல் அந்த புகைப்படத்தை கவனித்தவுடன் கண் அங்கேயே நிலைத்து நின்றது. இந்த புகைப்படத்தை எடுத்த கைகளுக்கு மனதார ஒரு நன்றி சொல்லிவிட்டு மீண்டும் அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் … மனதில் தோன்றிய வரிகள் தான் மேலே எழுதியவை. அப்படியே எண்ணங்கள் கேள்விகளாக பிரள ஆரம்பிக்க அவற்றை இங்கே பதிகிறேன்.











இல்லை எனில் …எங்கே தொலைத்தோம் அவற்றை ?
இல்லை எனில் .. அப்படி என்னதான் பெற்று இருக்கிறோம் இப்போது ?
இல்லை எனில் … அப்படி என்ன தான் சம்பாதித்து இருக்கிறோம் ?
இல்லை எனில் .. அப்படி என்ன தான் வாழ்கிறோம் .. வாழ்க்கை என்ற பெயரில் ?



யோசிப்போம்.


