படமும் கற்றலும் : 023
#படமும்கற்றலும் ; 023
” மூடப் பழக்க வழக்கங்களை யாராவது ஒருவர் உடைத்துக்கொண்டு தான் இருப்பார். அவரை உலகம் முதலில் கிண்டல் செய்து, கேள்வி கேட்டு, பின் … அவர் சொல்வதன் உண்மையை புரிந்து கொள்ளும். பிறகு அவரை பாராட்ட ஆரம்பிக்கும். அப்போது அநேகமாக அவர் உலகத்தை விட்டு விலகி சென்று இருப்பார். ! “



மந்த்ரா பேடி – ஒரு நடிகையாக நமக்கு தெரிந்தவர். ஆனால் இங்கே நாம் நடிகை மந்த்ரா பேடியை பார்க்கப் போவது இல்லை. மாறாக .. மாரடைப்பு காரணமாக திடீர் என்று இறந்த கணவரின் உடலுக்கு இடுகாட்டிற்கே சென்று அனைத்து இறுதி மரியாதைகளையும் செய்யும் ஒரு அபூர்வ ஆளுமையாக பார்க்கலாம். ஆம். இறந்த கணவனுக்கு முழு இறுதி மரியாதையையும் செய்து விட்டு வீடு திரும்பிய அந்த ஆளுமையின் ” மூட நம்பிக்கையை கொளுத்துவோம் ” தான் அவர் பற்றிய நம் பார்வை.
சுடுகாடு என்று வந்துவிட்டால் உடனே ஆண்கள் மட்டுமே செல்வார்கள். ஏன் ?



இன்னமும் பல மூட நம்பிக்கைகள்.
வாழ்க்கை முழுவதும் கூட வாழ்ந்த கணவனுக்கு .. அப்பாவிற்கு … அண்ணனுக்கு .. தம்பிக்கு .. நட்புக்கு … அவர்களின் கடைசி முகம் பார்த்து ” சென்று வாருங்கள் ” என்று சொல்லும் உரிமை மட்டும் வீடு வரை மட்டுமே ! இது என்ன logic ! ? என்று கேட்க தோன்றுகிறது.
இறப்பு வந்தால் யார் கடைசி வரை உடன் வர வேண்டும் என்பதே மாற்றி எழுதப்பட வேண்டும். ” வேறு வழியில்லை ” அதனால் சுடுகாடு வரை போயிட்டு வந்தேன் ” என்பவர்களை விட ..




இவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் … இறுதி மரியாதை செய்யும் இடம் வரை வரவேண்டும்.
மிக யதார்த்தமாக யோசித்தால் அது just ஒரு உயிரற்ற உடல். ஆனால் உணர்வுகளில் யோசித்தால் .. அது ஒரு உயிர் சார்ந்த connect. அதற்கான மரியாதையை செய்யும் உரிமை இருசாரார்க்கும் கடைசி வரை அளிக்கப்பட வேண்டும்.



பிறப்பில் ஆணையும் பெண்ணையும் சந்திக்கும் மனிதம் இனி இறப்பிலும் சந்திக்கட்டும். உடலுக்கு வைக்கும் தீயை சுடுகாட்டு மூட நம்பிக்கைகளுக்கும் சேர்த்து வைக்க வேண்டிய நேரம் இது !
யோசிப்போம்.