நான் எனப்படும் நான் : 136
” Knowledge is Everywhere. Skill is Everywhere. The only missing link is …..’Application’ ! “



சிலரை கவனித்து ஆச்சர்யம் கொள்கிறேன். நிறைய கற்றுக்கொள்கிறார்கள். எங்கும் இருக்கிறார்கள். கேள்வி கேட்கிறார்கள். அதை கற்றுக்கொண்டேன் இதை கற்றுக்கொண்டேன் என்கிறார்கள். பதில் சொல்கிறார்கள். வாவ் என்று ஆச்சர்யம் கொள்கிறார்கள். அனைத்தும் சரி. இரண்டு வருடங்கள் கழித்து பார்த்தால் .. ” அப்படியே ” இருக்கிறார்கள். ஒரு முன்னேற்றமும் இல்லை என்கிறார்கள். உலகம் சரியில்லை என்கிறார்கள். ஏன் இது ?



Books, Podcast, Youtube, Facebook, Insta, Linkedin, Twitter, Whatsapp … And Now Clubhouse .. Online classes, Direct classes … அறிவுக்கா பஞ்சம் ? கொட்டிக் கிடக்கிறது அறிவு இங்கே. ( வேறு தேவையற்ற பக்கங்களும் இவற்றில் உண்டு. நாம் தேடுவதில் இருக்கிறது நமக்கான உலகம் ! ). என்ன வேண்டுமோ அவ்வளவும் இங்கே கிடைக்கிறது. அவ்வளவும். ஒன்றே ஒன்று தான் missing. ஆம். அத்தனையும் கேட்டு, கற்று, உணர்ந்து, செயல்பட்டு, பாதியில் விட்டுவிட்டு … ஆம். அந்த Missing link என்ன என்று புரிகிறதா ? – கற்றதை பயன்படுத்தி அதன் ஆழமான உண்மையை வெளிக்கொணர்ந்து, அதை தனக்குள் இருத்தி, அதன் மூலம் தான் திறமையை அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்வது ! செய்கிறோமா ?



இப்போதெல்லாம் பணம் இருந்தால் நேரம் இருந்தால் ” அதை கற்றுக்கொண்டேன் இதை கற்றுக்கொண்டேன் ” என்று பேசுவது Fashion ஆகி இருக்கிறது. கற்றல் சுலபம். செயல்படுதல், மாறுதல், புதிய உயரம் அடைதல் .. இதை தவிர அனைத்தும் நடக்கிறது ! மனிதர்களில் கற்பவர்கள் எனக்கு ஆச்சர்யம் இல்லை. அதற்க்கு பின் அவர்கள் என்னவாக மாறுகிறார்கள் மாறவில்லை என்பதே என் ஆச்சர்யம் !
ஒருமுறை என்னிடம் வந்த ஒருவர் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை சொல்லிவிட்டு …
” புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். நல்ல புத்தகம் ” என்றார்.
” அதற்கு பிறகு ? ” என்று நான் அவரின் கண்ணை பார்த்து கேட்க …
” இன்னொரு புத்தகம். படித்துக்கொண்டே இருக்க வேண்டியது தான் ” என்றார்.
இப்படித்தான் இருக்கிறது கற்றல். இது ok. ஆனால் .. அது அவரின் திறமையை உயர்த்தி இருக்கிறதா ? அவரை அடுத்த உயரம் நோக்கி நகர்த்தி இருக்கிறதா என்பதே கேள்வி.



” நீங்கள் என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் ? ” என்னிடம் ஒருவர் கேட்டார்.
நான் சொன்னேன்.
” இன்னமுமா அதை படிக்கிறீர்கள் ? ” அவர் கேட்டார்.
” ஆம். அதன் மூலம் மாற்றத்தை எனக்குள் ஏற்படுத்தி, அடுத்த உயரம் கண்டுபிடித்து, இன்னொரு புதிய வாழ்க்கை வாழ்வதற்குள் இந்த பிறப்பு முடிந்துவிடும் போல ! ” நான் சொன்னேன்.
” அப்படி என்றால் மற்ற புத்தகங்களை படிப்பது இல்லையா ? “
“ஓரே ஒரு புத்தகம் மட்டுமே படிக்கிறேன் என்று எங்கே சொன்னேன் ?. பல புத்தகங்கள் படிக்கிறேன். அந்த அனைத்து புத்தகங்கள் மூலமும் இன்னமும் மாற்ற வேண்டியவைகளை மனதில் குறித்துக் கொள்கிறேன். ஓவ்வொரு நாளும் மாறுகிறேன். கடந்த முறை என்னை பார்த்ததை போல அடுத்த முறை நாம் சந்திக்கும்போது நான் இருக்கப் போவது இல்லை. அது உறுதி ! “
” ஓ .. இப்படி நான் யோசிக்கவில்லை. புத்தகம் படிப்பதே பெரிய விடயம் என்று நினைத்துவிட்டேன். “
” நிச்சயம் புத்தகம் படிப்பது பெரிய விடயம் தான். ஆனால் அதை விட பெரிய விடயம் … இருக்கிறது. அது நாம் மாறுவது ! அதை செய்யாது கற்பதில் என்ன இலாபம் இருக்கப்போகிறது ? மாறாமால் கற்கிறோம் என்றால் … அதற்கு ஒரு பொருள் உண்டு. ஆங்கிலத்தில் சொல்கிறேன்… ” You are Just a Learning Material. Not a Change Material ! “


