நான் எனப்படும் நான் : 138
” Can and Can’t – in between A Life Blossoms or Disappears.!.”



” இதற்கு இனி வாய்ப்பில்லை. என்னால் முடியாது. எனக்கு அவ்வளவு சக்தி, திறமை, கவனம் இல்லை. ” என்று ஒதுங்கும் பலரை கவனிக்கிறேன். அவர்கள் இழப்பது வாய்ப்பை மட்டும் அல்ல. புது வாழ்க்கையையும்.!
” இப்போது இல்லை எனில் எப்போது ? – என்று பேசும் மனிதர்களை கவனிக்கிறேன். சில வருடங்களில் யாரும் நினைக்கமுடியா பெரு வாழ்வினை வாழ ஆரம்பிக்கிறார்கள்.
” இன்றிலிருந்து இருபது வருடத்தில் … ” என்று வாழ்பவர்களை கவனிக்கிறேன். அவர்கள் அப்படியே ஆகிறார்கள். அவர்கள் சொன்ன வழி வேண்டுமானால் மாறி இருக்க கூடும். ஆனால் இலக்கை நோக்கிய அவர்களின் தீர்க்கத்தில் மாற்றம் இல்லை.



வாழ்க்கையை define செய்யவே முடியாது என்னும்போது ” முடியும் ” என்பதும் “முடியாது” என்பதும் நம்பிக்கை மட்டுமே. மீண்டும் சொல்கிறேன். வெறும் நம்பிக்கை மட்டுமே.
” பயிற்சியாளராக என் வாழ்க்கையை நோக்கி நான் தயாரான போது ..
” இதெல்லாம் சரிவராது ” என்று சொன்னவர்கள் ஏராளம். இதெற்கெல்லாம் பெரும் அனுபவமும், அறிவும், சிந்தனா சக்தியும் வேண்டும் என்று முட்டுக்கட்டை போட்டவர்களை பார்த்து சிரித்தே கடந்தேன். ஏன் எனில் …அப்போது நான் சொல்லும் விளக்கங்கள் ஏற்கப்படமாட்டாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். முடியாது என்று சொல்பவர்களுக்கு ஒரே ஒரு பதில் மட்டுமே. அந்த பதில் ” முடியும் ” என்று பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். கிடையவே கிடையாது. அது சொன்னதை செய்வது மட்டுமே ! அதை விட ஒரு பெரும் பதில் இந்த உலகத்தில் இல்லை.
இன்று நிறுவனங்கள் அவர்களின் முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டங்களுக்கு என்னை அழைக்கும்போது ஒன்றே ஒன்றை மட்டுமே நினைவில் கொள்கிறேன். ” சொல்வதில் இல்லை இந்த கூட்ட முடிவு. செய்வதில் அல்லது செய்ய வைப்பதில் மட்டுமே இருக்கிறது.”. ஆகவே …என் பேச்சில் அது சார்ந்த ஒரு வீச்சு இருக்கும். வெறும் பேச்சை வைத்துக்கொண்டு நிறுவனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் நிறுவனங்களில் நான் என் இருப்பை தொடர்வது இல்லை. அவர்களுக்கு Can / Cant Definition எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம். ஆனால் எனக்கு … ” செய் அல்லது செய்ய வை அல்லது செய்து செய்ய வை ” மட்டுமே.!
என்னிடம் இருந்து விலகிய மனிதர்களிடம் ஒரு பொதுவான pattern நான் பார்ப்பது உண்டு. “பேசிக்கொண்டே” இருப்பார்கள். என்ன தான் செய்திருக்கிறார்கள் ? என்று கவனித்தால் ஒன்றும் பெரியதாக இருக்காது. அப்படி எனில் அவர்களுக்கு என் அலைவரிசையில் வேலை இல்லை என்பதை புரியவைத்து வெளியேற்றுவது அல்லது வெளியேறுவது .. இரண்டும் நடந்திருக்கும். பின்னே ? எவ்வளவு தான் பேசிக்கொண்டே இருப்பது ?



பயிற்சியாளர், பயணி, நாடோடி, புகைப்பட கற்றுனர், எழுத்தாளர், பேச்சாளர் .. இவை எல்லாம் மக்களுக்கு கிடைத்த பெயர்கள். ஆனால் எனக்கு ஒரே ஒரு தொடர் மட்டுமே உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும்.
Can. Do. Reset. Make. Install. Set New Benchmark. Elevate. Model. Inspire. Learn. Can. Do. Reset…..
ஆம். Can ல் ஆரம்பிக்கும் என்னின் அந்த கற்றல் தொடர் முடிவதே இல்லை.
அதே போல Cant ல் ஆரம்பிக்கும் தொடர் பலருக்கு தொடங்குவதே இல்லை ! வெற்று விவாதம், பேச்சு, புறம் கூறல், குறை காணல் … என்று அவர்கள் வாழ்க்கை முடிந்தே போகிறது.
உங்களுக்கு உங்களின் வாழ்க்கை எங்கே துவங்குகிறது என்று யோசித்து உள்ளே Can Can என்று ஒலித்தால் உங்களுக்கு எம் முன்
வாழ்த்துக்கள்
. நம் பயணம் தொடரவிருக்கிறது. நாம் விரைவில் சந்திக்க கூடும். சந்திப்போம்.


