படமும் கற்றலும் : 026
#படமும்கற்றலும் ; 026
” சில திறமைகள் நம்முடன் வாழ்ந்து, நம்முடன் பயணித்து, நம்முடனே இருக்கிறார்கள். ஏனோ .. நாம் அந்த திறமைகளை கண்டுகொள்ளாமல் பயணிக்கிறோம் “
படம் ; தளபதி
” பிடிச்சிருக்கு ” அவ்வளவு தான் வசனம். ( அதை மணிரத்னம் கொடுத்ததே மிக அதிகம் ! ). அதை சட்டென்றும் சொல்லிவிடக்கூடாது. அதே சமயம் முழு உணர்வோடும் சொல்ல வேண்டும். கண்களும் இணைய வேண்டும். சட்டென மடியில் விழுந்துவிட வேண்டும். இதற்கு .. இளையராஜா, ரஜினி, மணிரத்னம், சந்தோஷ் சிவன் … அனைவரும் உடன் வேறு போட்டி போடுவார்கள். அனைவரையும் காட்சிக்குள் வைக்க வேண்டும். அதே சமயம் .. தன் நடிப்பும் அங்கே இருக்க வேண்டும். அது நடிப்பாகவும் தெரியக்கூடாது ! அங்கே தான் மிளிர்வார் ஷோபனா !
அதே போல .. ரஜினி யும் ஷோபனாவும் மீண்டும் சந்திக்கும் காட்சி. இருவரும் பார்த்தவுடன் இளையராஜா – சுந்தரி கண்ணால் ஒரு சேதியை சோகமாய் வாசித்து ஆரம்பிக்க .. காட்சி நமக்குள் உணர்வாக அவிழும்.
” நீங்க நல்லாருக்கீங்களா ? “
” நீ நல்லாருக்கியா ? “
என்று அந்த சந்திப்பில் .. முகம் முழுக்க இயலாமையை பூசிக்கொண்டு நடிக்க வேண்டும். அசத்தி இருப்பார். காட்சியை பார்த்தவர்களுக்கு அவரவர் வாழ்க்கை சுப்புலட்சுமிகள் ஞாபகத்தில் வந்திருக்க கூடும் !
இது நம்ம ஆளு.
பாக்யராஜூக்கு என்று ஒரு நடிப்பு வட்டம் உண்டு. அழகாய் score பண்ணுவார். ஆனால் இந்த படம் முழுக்க ஷோபனா Score செய்திருப்பார். எனக்கு தெரிந்து கதாநாயகிகளில் அவருக்கு இணையாக அல்லது கொஞ்சம் மேலாக Score செய்தது ஷோபனா என்றே தோன்றுகிறது. சிரித்து கொண்டே Serious ஆக கருத்துக்களை சொல்லி விடும் படத்தில், இயக்குனர் நடிகரை கடந்து தன்னை நிலைநிறுத்துவது … எளிதான ஒன்றல்ல.
இந்த திறமையை தமிழ் திரை உலகம் இன்னமும் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ( மலையாள உலகம் நன்றாக பயன்படுத்தி இருக்கிறதோ என்றும் ஒரு கேள்வி எழும் ! ).
கதாநாயகி என்ற பார்வையில் இருந்து வெளியே எடுத்து, எந்த ஒரு Character ஐயும் அவரால் செய்ய முடியும் என்றே எனக்கு தோன்றுகிறது. அவருக்கான சவால் சரியாக கொடுக்கப்படவில்லை. தமிழில் எவ்வளவு படங்கள் என்று பார்த்தால் அவ்வளவாக இல்லை. அப்படி நிறைய Characters கொடுக்கப்பட்டு இருந்தால் .. அந்த பத்மஸ்ரீ யின் திறமை இன்னமும் நமக்கு முன் வெளியே வந்திருக்க கூடும் !





