படமும் கற்றலும் : 027
#படமும்கற்றலும் ; 027
” அனைத்து பழக்கங்களும் மனித வாழ்வின் தினசரி பயன்பாட்டுக்கு வந்தால் …. அவற்றிற்கு என்ன பெயர் இருந்தாலும் சரியே ! “



Twitter ல் அந்த புகைப்படம் என்னை சில நொடிகள் நிறுத்தி யோசிக்க வைத்தது. யோசிக்க வைக்கும் எதுவும் சிறப்பானவையே. இந்த புகைப்படம் எடுத்து கைகளுக்கு எம் மனம் நிறைந்த
வாழ்த்துக்கள்
.



ஒவ்வொரு கோவிலும் தனக்குள் நிறைய நம்பிக்கைகளை வைத்திருக்கின்றன. வேண்டுதல் அங்கே மூச்சு. அமைதி அங்கே இயல்பு. ஐதீகம் அங்கே வாழ்வியல். இவை அனைத்தும் அங்கே இருக்கட்டும். இவை அனைத்தும் நல்லவற்றை கொண்டுவரட்டும். கொண்டு வருகிறது.
ஒவ்வொரு கோவிலும் நமக்குள் கொண்டு வரும் அமைதி மிகப் பெரிய விஷயம். பெரும் மனிதர்கள் கூட தங்களின் தவறுகளை நினைத்து வருந்தும் இடம் ஒன்று உண்டு எனில் அது நிச்சயம் கோவிலாக தான் இருக்க முடியும். இதெல்லாம் சரி. ஆனால் .. கோவிலுக்கு வெளியே கோவிலால் அடித்துக்கொள்ளும் மனிதர்களை பார்க்கும்போது தான் … வருத்தமாக இருக்கிறது.



கடவுள் என்பது கடந்து உள் செல் என்பதன் சுருக்கம் தான். தனக்குள் பயணிக்காத எவரும் .. எத்தனை கடவுள்களை பார்த்தாலும், வேண்டினாலும், அருகில் வைத்துக்கொண்டாலும் .. ஒன்றும் ஆகப்போவது இல்லை. தனக்குள் யோசிக்க வைக்க உதவாத எந்த கடவுளும், எந்த கோவிலும் just ஒரு நம்பிக்கை தான் ! நம்பிக்கை என்கிற பெயரில் அதற்கு மதிப்பு உண்டு. அவ்வளவுதான் !



படையெடுப்புகளில் முதலில் இடிக்கப்படுவது கோவில்கள் தான். கோவில்களை இடித்தால் மக்களின் நம்பிக்கைகளை இடித்துவிடலாம் என்று நினைக்கும் மன்னர் மனப்பான்மை இன்று இருக்கும் அரசியல்வாதிகளிடமும் இருக்கிறது. மசூதியை / Church ஐ / கோவிலை இடித்து விட்டால் .. கடவுள் பழிவாங்குவது எல்லாம் இருக்கட்டும். அதற்க்கு முன் வேறு ஒன்று அவர்களை பழி வாங்கும். அது என்ன என்று யோசிக்க முடிகிறதா ? ஆம். அது ….மக்களின் வெறுப்புணர்வு ! மக்களின் வெறுப்புணர்வை சம்பாதித்த எவரையும் எந்தக் கடவுளும் காப்பாற்ற போவது இல்லை. அதனால் தான் ..
“மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ” எல்லாம்.
ஞாபகம் இருக்கட்டும். மக்களுக்கு மீறிய கடவுள்கள் இங்கே இல்லை. இல்லவே இல்லை. மக்களுக்கு நல்லது செய்பவர்களை விட பெரிய கடவுள்களும் இல்லை. அதே போல .. மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு கோவில் தேவை இல்லை. தேவையே இல்லை.


